23.4.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மோடியின் அப்பட்டமான வெறுப்பு பேச்சை தேர்தல் ஆணையம் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமற்ற முறை யில் நடுநிலையை கைவிட்டு விட்டது என விமர்சனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ராஜஸ்தான் பிரச்சாரத்தில் வெறுப்பு பேச்சு; மோடிக்கு எதிராக குவியும் கண்டனங்கள்.! மக்களை திசைதிருப்ப தரம் தாழ்ந்து பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
* காங்கிரஸ் ‘உங்கள் செல்வத்தை பங்கீடு செய்யும்’ என்று மக்களை எச்சரித்துள்ளார் பிரதமர் மோடி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உண்மையில் என்ன சொல்கிறது? காங்கிரஸின் ‘நியா பத்ரா’ செல்வத்தின் மறுபகிர்வு பற்றி பேசவில்லை மாறாக வருமான சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வது பற்றி பேசுகிறது.
* காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்வதற்காக அமராவதியில் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) நடத்திய முதல் கூட்டு பொது நிகழ்வில், உத்தவ் தாக்கரே, சரத்பவார், நானா படோல் (காங்கிரஸ்) ஆகியோர் பங்கேற்பு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் தார்வாட் மக்களவைத் தொகுதியான கருநாடகாவில் மே 7ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் லிங்காயத் தலைவர் திங்கலேஷ்வர் சுவாமி, விலகியதைத் தொடர்ந்து, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேருக்கு நேர் போட்டி.
தி டெலிகிராப்:
* சூரத் பா.ஜ. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறித்து ராகுல் காந்தி, ‘சர்வாதிகாரியின் உண்மையான முகம் மீண்டும் நாட்டின் முன் அப்பட்டமாக காட்டப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் தலைவரை தேர்ந் தெடுக்கும் உரிமையை பறிப்பது பாபாசாகேப் அம்பேத் கரின் அரசமைப்பை அழிக்கும் மற்றொரு படியாகும். நான் மீண்டும் சொல்கிறேன். இது ஆட்சி அமைப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல, நாட்டைக் காப்பாற்றும் தேர்தல் ’ என்று பதிவிட்டுள்ளார்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment