சுயமரியாதைச் சுடரொளி இராஜகிரி கோ. தங்கராசு அவர்களின் 100 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (23.4.2024) காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்தில் ராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் படத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், காப்பாளர் மு.அய்யனார், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் அதிரடி.அன்பழகன், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிகுமார், மாநகரச்செயலாளர் அ.டேவிட், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.இராமலிங்கம், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் காசி. அரங்கராசன், கரந்தை பகுதி தலைவர் வெ.விஜயன், கரந்தை பகுதி செயலாளர் ம.தனபாலன், மா.திராவிடசெல்வன், விசிறி சாமியார் முருகன், அடிகளார் இராஜகிரி தங்கராசு,அவர்களின் மூத்த மகன் த.பாண்டியன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் குடும்ப விளக்கு நிறுவன ஊழியர் அசோக்குமார் ஆகியோர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஏப்ரல் 23 – ராஜகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு பிறந்தநாள் தஞ்சையில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

Leave a Comment