சென்னை,ஏப்.23- சென்னையில் கடந்த 21 நாட்களில் 109 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதில் 31 பேர் கஞ்சா வழக்கில் கைதானவர்கள் ஆவார்கள்.
சென்னையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கையாக கொலை. திருட்டு, வழிப்பறி, கஞ்சா, குட்கா உள்பட போதைப் பொருட்கள் விற்பனை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்கிறது.
அந்த வகையில் கடந்த 1ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை யிலான 21 நாட்களில் மட்டும் 109 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
இதில் 31 பேர் கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்கள். இவர்களில் கொருக்குப்பேட்டை பகு தியை சேர்ந்த மஞ்சுளா (வயது 36), மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த வனிதா (36) ஆகிய 2 பெண்களும் அடங்குவர். சென்னையில் கஞ்சா புழக்கம் அதிகரித் துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தந்த காவல்நிலைய ஆய்வாளர்கள் அளித்த பரிந்துரையின் பேரில் இதற்கான உத்தரவை காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பிறப்பித்துள்ளார்.
387 பேர் மீது நடவடிக்கை
சென்னையில்இந்த ஆண்டு இதுவரையில் 387 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் கொலை, கொலை முயற்சி போன்ற குற்றங் களில் ஈடுபட்ட 186 பேர், திருட்டு, வழிப்பறி, பண மோசடி போன்ற குற்றங்களில் ஈடு பட்ட 64 பேர், கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற் பனை செய்த 101 பேர், குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த 17 பேர், ‘சைபர்’ குற்றத்தில் ஈடுபட்ட 2 பேர், பாலியல் தொழில் நடத்திய 9 பேர் உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.