சென்னை,ஏப்.23- தமிழ்நாட் டில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில், தமிழ் நாடு உள்மாவட்டங்களில் பறக் கும் படை சோதனை நிறுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல தடை இருக்காது.
நாடாளுமன்ற தேர்தல் ஏப் ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணை யம் கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி அறிவித்தது.
தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக அம லுக்கு வந்தன.
பணம், பொருட்கள் பறிமுதல்
அதாவது ஆவணம் இல்லா மல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லக் கூடாது என பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு பல் வேறு இடங்களில் பணம், பொருட்களை பறிமுதல் செய் தனர்.
தமிழ்நாட்டை பொறுத்த வரை கடந்த 19ஆம் தேதியே தேர்தல் முடிந்தாலும், அண்டை மாநிலங்களான கேரளா, கருநா டகா மற்றும் ஆந்திர மாநிலங் களில் தேர்தல் முடியாததால், தேர்தல் விதிமுறைகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 4ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் வணிகர்கள் சிர மப்பட்டு வருகிறார்கள். தமிழ் நாட்டில் தேர்தல் முடிந்துவிட் டதால் தேர்தல் வழிமுறைகளில் தளர்வு அளிக்க வேண்டும் என்று வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மறு வாக்குப்பதிவு
இதற்கிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத் யபிரத சாகு நேற்று (22.4.2024) செய்தியாளர்களிடம் கூறியதா வது:-
வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி இதுவரை எங்களிடம் எந்த கோரிக்கையும் வரவில்லை. மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமா என்பதை சம்பந்தப்பட்ட தேர் தல் நடத்தும் அதிகாரியும், தேர்தல் பொதுப்பார்வையாள ரும் முடிவு செய்து பரிந்துரைக்க வேண்டும்.
அதன் அடிப்படையி லேயே தேர்தல் ஆணையம் உரிய அறிவிப்பை வெளியிடும். ஆனால் இதுவரை அதுபோன்று மறு வாக்குப்பதிவுக்கான பரிந்துரை எதுவும் தேர்தல் ஆணையத்திற்கு சென்றதாக தகவல் இல்லை.
சட்டமன்ற உறுப்பினர் மர ணம் காரணமாக விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளது. அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படுமா? என் பதை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்க முடியும். இதுவரை அதுபற்றிய தகவல் இல்லை.
பறக்கும் படை கலைப்பு
தமிழ்நாட்டில் 39 நாடாளு மன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலை யில் தமிழ்நாட்டில் உள்மாவட் டங்களில் அனுமதிக்கப்பட்டி ருந்த பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் ‘வீடியோ’ கண்காணிப்பு குழுக் கள் கலைக்கப்பட்டு விட்டன.
தேர்தல் நடைபெற உள்ள பக்கத்து மாநிலங்களின் எல் லையை ஒட்டியுள்ள திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, திருப் பத்தூர், திருப்பூர் ஆகிய 13 மாவட்டங்களில் மட்டும் பறக் கும்படை, நிலையான கண் காணிப்பு குழுக்களின் வாகன சோதனை இருக்கும்.
171 குழுக்கள்
அந்த 13 மாவட்டங்களிலும் மொத்தம் 69 பறக்கும்படை களும், 102 நிலையான கண் காணிப்பு குழுக்களும் சேர்த்து மொத்தம் 171 குழுக்கள் சோதனை மேற்கொள்ளும். நிலையான கண் காணிப்பு குழுவினர், பக்கத்து மாநில எல்லை சோதனைச் சாவ டிகளில் வாகன சோதனை களை மேற்கொள்வார்கள். அந்த மாநி லங்களில் தேர்தல் முடிந்ததும், அவற்றின் எல்லையில் உள்ள பறக்கும்படைகள் திரும்பப் பெறப் படும். -இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம், எல்லை மாவட்டங்களைத் தவிர மற்ற 25 மாவட்டங்களில் உரிய ஆவ ணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் மற்றும் நகை களை எடுத்து செல்ல முடியுமா? என்று கேட்டபோது, பறக்கும் படை சோதனை அங்கு இல்லா விட்டாலும் அனைத்து மாவட் டங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில்தான் உள்ளன என்று சத்யபிரத சாகு பதில் அளித்தார்.