வாக்காளராகத் தகுதியிருந்தும் 18 கோடி பேரின் பெயர் பட்டியலில் இல்லை! தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன?

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஏப். 23- இந்தியாவில் தகுதி இருந்தும் 18 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் சேராமல் உள்ளனர். அவர் களை பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

100 சதவீத இலக்கு

இந்தியாவில் 18ஆவது நாடாளு மன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்ப திவை இலக்காக வைத்து தேர்தல் ஆணையம் பணியாற்றுகிறது. ஆனா லும் 19ஆம் தேதி நடந்து முடிந்த முதல் கட்ட தேர்தலில் வெறும் 50 சதவீத வாக்குப் பதிவு மட்டுமே நடந்து உள் ளது. 100 சதவீத வாக்குப்பதிவு இலக்கு என்பது வெறும் கானல் நீராக உள்ளது.

100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறு வதில்லை என்ற கேள்விக்கு நாம்விடை தேடும் முன், இந்தியர்களுக்கு வாக்களிப் பதில் முழு வாய்ப்பு அளிக்கப்படுகிறதா என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 141 கோடி அதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் தோராயமாக 115 கோடி இருக்கிறது.

இந்த எண்ணிக்கையில் உள்ள அனைவரும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் இந்த தேர் தலிலே தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் மொத்தம் 97 கோடி பேர் தான் இருக்கி றார்கள்.

அப்படியென்றால் மீதமுள்ள 18 கோடி பேர் ஏன் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை அவர்கள் எங்கே போனார்கள். இதற்கான முழுப் பொறுப்பேற்க வேண்டியது தேர்தல் ஆணையம் தான்,ஏனென்றால் வெறும் தேர்தல் நடத்துவது மட்டுமல்ல, வாக்காளர் பட்டியல் தயாரிப்பதும் அவர் கள் பணி தான்.
இந்த முதல் பணி யிலேயே தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்து விடு கிறது. ஒருவர் 18 வயது ஆகிவிட்டாலே அவருக்கு ஓட்டுப் போடும் உரி மையை தேர்தல் ஆணையம் தானாக வழங்கி விடவேண்டும்.

மாறாக அவர்கள் வந்து விண்ணப் பித்தால் தான் உரிமை தரு வோம்என்று சொல்லும்நடைமுறையை முதலில் மாற்றி அமைக்க வேன்டும். ஆதர் காடு, பான்கார்டு போன்று வாக் காளர் அடையாள அட்டையையும் எளிதாக பெறும் நடைமுறைகளை கொண்டுவர வேண்டும்.
தற்போது வாக்காளர் அடையான அட்டை பெறுவதற்கு 18 வயது ஆனவு டன் வாக்குசாவடி மய்யம் அல்லது இணைய வழி முறையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு செய்கிறார்கள்.

ஆனால் இந்த மனுக்களைத் தேர்தல் ஆணையர் முறையாக ஆய்வு செய்து பட்டியலில் சேர்ப்பதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து இருந்த வண் ணம் உள்ளள.
அதனால் தான் கோடிக்கணக்கான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இன்னும் சேர்க்கப்படாமல் உள்ளன. அதன்பின் வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்த்துவிட்டாலும் அதன் பின் முகவரி மாற்றம் போன்றவற்றை செய்வ திலும் மக்கள் மிகப்பெரும் பிரச்சினை களை சந்தித்து வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *