திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்தமுன்னோடியும், மேனாள் அமைச்சரும் எந்நாளும் சுயமரியாதை வீரருமான மதுரை பொன்.முத்துராமலிங்கம் அவர்களின் 84ஆவது பிறந்த நாளில் (20.4.2024) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் நலமுடன் வாழ்ந்து தொடர்ந்து செயலாற்ற வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக்கொண்டார். மதுரையில் அவர் இல்லத்தில் தலைமை கழக அமைப்பாளர் வே.செல்வம் மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் வா.நேரு, மாவட்ட செயலாளர் இராலீ.சுரேஷ், பகுதித் தலைவர் மாவட்ட துணைத்தலைவர் இரா.திருப்பதி, ஆட்டோசெல்வம் ஆகியோர் ஆடைகளும் புத்தகங்களும் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.