கோவில்பட்டி, ஏப். 22- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில்முறையாக தகவல் அளிக்காத கோவில்பட்டி சார் பதிவாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவில்பட்டி அருகேயுள்ள இனாம் மணியாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. ஓய்வுபெற்ற அரசு நில அளவையர். இவரது தந்தை சுப்பையா பெயரில் அய்யநேரி ஊராட்சிக்கு உட்பட்ட சுபா நகரில் உள்ள நிலம் தொடர் பாக, நீதிமன்றத்தில் வழக்கு நிலு வையில் உள்ளது.
நீதிமன்ற வழக்குக்கு சில ஆவணங்கள் தேவைப்பட்டதால், தனது தந்தையின் நிலம் தொடர் பாக2020 டிச. 7ஆம் தேதி தகவல் அறியும்உரிமை சட்டத்தின்கீழ், சில தகவல்களைத் தருமாறு குரு சாமி, மாவட்ட பதிவாளரிடம் விண்ணப்பித்தார்.
குருசாமி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு, கோவில்பட்டி சார் பதிவாளருக்கு, மாவட்டப் பதிவாளர் பரிந்துரை செய்துள் ளார். ஆனால், அப்போது கோவில் பட்டி சார் பதிவாளராக இருந்த பாஸ்கரன், குருசாமி கேட்ட கேள் விகளுக்கு, மாறுபட்ட பதிலைத் தந்ததால், அவர் மாவட்டப் பதி வாளருக்கு மேல்முறையீடு செய் தார். ஆனால், அதற்கு எவ்வித பதிலும் வரவில்லை. இதையடுத்து, 2021 ஏப். 12ஆம் தேதி தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் குருசாமி புகார் செய்தார்.
இப்புகார் தொடர்பாக விசா ரணை நடத்திய ஆணையம், குருசா மிக்கு சரியான தகவல் தர மறுத்த அப்போதைய கோவில் பட்டி சார் பதிவாளரும், பொது தகவல் அலுவலருமான பாஸ்கர னுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.
மேலும், அந்த தொகையை பாஸ்கரனிடம் வசூலித்து குருசாமியிடம் கொடுக்கும்படி தற்போதைய சார் பதிவாளருக்கு உத்தரவிட்டது
இதையடுத்து, தற்போதைய கோவில்பட்டி சார் பதிவாளர் சூசை ஜேசுதாஸ், பாஸ்கரனிடம் வசூலித்த ரூ.25 ஆயிரத்துக்கான வரைவோலையை குருசாமியிடம் வழங்கினார்.