இன்றைய ஜனநாயக ஆட்சியில் பார்ப்பானுக்கு ஒருவன் எதிரியானால்-அவன்தான் ஜனநாயகத்துக்கு எதிரியாகத் தகுதி இல்லாதவனாகக் கருதப்படுகிறானே ஒழிய பார்ப்பனர் அத்தனை பேரும் சங்கராச்சாரி முதல் சவுண்டி மாமா வரை 100-க்கு 100 பேரும் ஜனநாயகத்தின் ஆச்சாரியார் பீடமாகவே கருதப்படு கிறார்கள். அதுபோலவே பார்ப்பனர்களுக்கு அடிமை களான அத்தனை பேரும் மரியாதைக்கு உரியவர் களாகவே ஜனநாயகத்திற்குத் தகுதி உள்ளவர்களாகவே – கருதப்படுகிறார்கள். பெய்யும் மழை அத்தனையும் இவ்விரு கூட்டத்தாருக் கன்றி வேறு எவருக்காவது பயன்படுகின்றதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’