புதுடில்லி, ஏப்.22 மோடி அரசு, உணர்வற்ற அரசு, சாமானிய மக்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை என்றும், ரயில்வே துறை செயலற்று உள்ளது என்றும், குஜராத்தைச் சேர்ந்த தனது நண்பர்களுக்கு ரயில்வே துறையை பரிசளிக்க விரும்புவதால், இந்த சீரழிவு வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தெரிகிறது? என பொதுமக்களும் ரயில் பயணிகளும் விமர்சித்து வருகின்றனர்.
வசதியானர்களுக்கு ஆதரவாகவே செயல் படும் மோடி அரசு, செல்வந்தர்கள் செல்லும் ‘வந்தேபாரத்’ போன்ற கட்டணம் அதிகம் உள்ள ரயில்களில் மட்டும் வசதிகளை செய்து கொடுக்கிறது. ஆனால், சாமானிய மக்கள் பயணம் செய்யும் சாதாரண மற்றும் விரைவு ரயில்களில், பயணிகளின் வசதிக்காக எந்தவொரு நடவடிக் கையும் எடுக்காமல் இருப்பது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ரயில்களை அறிமுகப்படுத்தி உள்ளதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மோடி அரசு, ரயில்வே துறையில் நடைபெறும் அவலங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் நம்பிக் கையான ரயிலில், அவர்கள் அமர்ந்து செல்லக்கூட இடம் கிடைக்காமல் அவதிப்படுவது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. நரேந்திர மோடி முழு இரயில்வேயையும் தனியார்மயமாக்க விரும்புவதால் இதுபோன்ற செயல்களில் ஆர்வம் காட்டவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. என பொது மக்களும் ரயில் பயணிகளும் விமர் சித்து வருகின்றனர். நாட்டில் இயங்கும், அனைத்து வகையான ரயில்களும் தாமதமாக இயங்குகின்றன, பயணிகளுக்குப் போதுமான தண்ணீர் இல்லை, கழிப்பறைகள் பராமரிக்கப்படுவது இல்லை, அழுக்கு நிறைந்த கழிப்பறைகளாக உள்ளன. இதில் பயணம் செய்யும்போது மனிதர்களை கால்நடைகளை போன்று ஏற்றிச் செல்வதற்கான அனுபவம் பயணிகளுக்கு ஏற்படுகிறது என கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ரயில் களின் கட்டணம் குறைவு என்பதால், அளவுக்கு மீறிய பயணிகள் பயணம் செய்து வரும் நிலையில், அதற்கு தேவையான பெட்டிகளை இணைக்காத காரணங்களால், சாதாரண பயணச்சீட்டு எடுக்கும் பயணிகள், முன்பதிவு செய்துள்ள பயணிகளின் ரயில் பெட்டிகளில் ஏறி, அவர்களுக்கு இடையூறு செய்யும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை படுக்கை பெட்டிகளில் மட்டுமே இதுபோன்ற அவலங்கள் அரங்கேறி வந்த நிலையில், சமீப காலமாக 2ஆம் வகுப்பு குளிர் சாதனப் பெட்டியிலும், பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு இடம் கிடைக்காத நிலையில், பயணிகளின் அத்துமீறல் தொடர்பாக வாக்கு வாதங்களும், மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற முறைகேடான பயணங்களைத் தடுக்க வேண்டிய ரயில்வே துறையும், ரயில்வே காவல்துறையினரும், தகுந்த நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது, பொதுமக்கள், மற்றும் ரயில் பணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மோடி, அரசாங்கத்தின் செயலற்ற தன்மை இது என விமர்சிக்கும் பயணிகள், பயணிகளுக்கு ஏற்ப போதிய பொது சேவைகளை இயக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
மோடி அரசு, அதிவேக ரயில் திட்டங்களுக்கு காட்டும் முக்கியத்துவத்தை, வெகுஜனங்களும் பயணிக்கும் வகையில், அவர்களுக்குத் தேவை யான இருக்கை வசதிகள் உள்பட அடிப்படை ஆதாரங்களின் அவசியத்தை புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சமீபத்தில், ரயில் ஒன்றின் 2ஆவது வகுப்பு குளிர்சாதன பெட்டியில் ஆட்டு மந்தைகளைப் போல மக்கள் கூட்டம் நெருடுக்கடித்து பயணம் செய்வது தொடர் பான காட்சிப்பதிவு ஒன்று வெளியானது. இந்தக் காட்சிப் பதிவை பயணி ஒருவர், ரயில்வே துறை அமைச்சர், அஸ்வினி வைஷ்ணவுக்கு ‘டேக்’ செய்து, அத்துடன், “இது ஜெனரல் கோச்சோ, ஸ்லீப்பர் கோச் அல்ல. இது 3 ஏசி கோச் அல்ல. இது 2ஆவது ஏசி கோச், என குறிப்பிட்டிருந்தார்.ரயில்வே அமைச்சகத்தின் செயலற்ற தன்மையை விமர்சித்த மற்றொரு நபர், “2ஆவது ஏசி பெட்டி மிகவும் மோசமான நிலையில் இருந்தால், 3ஆவது ஏசி மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளின் நிலைமையை கற்பனை செய்து பார்க்க முடியும்” என்று குறிப் பிட்டுள்ளார். மற்றொரு பயணி, “இது நடப்பது முதல் முறையல்ல. உறுதியான பதிவு செய்யப்பட்ட இருக்கைகள் இருந்தபோதிலும், மும்பையில் இருந்து வதோதரா வரை 6 மணி நேரம் எனது குடும்பத்தினர் 6 மணிநேரம் நின்றிருந்த ஒரு வேதனையான அனுபவம் எனக்கும் இருந்தது. இது ஒரு உணர்வற்ற அரசாங்கம். “இந்தியாவில் வரி செலுத்துவோர் சக்தியற்றவர்களாக உணர்கிறோம்” என தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த மற்றொரு பயணி, “இது நடப்பது முதல் முறையல்ல. முன்பதிவு செய்யப்பட்ட உறுதியான இருக்கைகள் இருந்தபோதிலும் எனது குடும்பமும் மும்பையில் இருந்து வதோதரா வரை 6 மணி நேரம் நின்றவாறு பயணித்தது எனக்கும் ஒரு வேதனையான அனுபவம். இது ஒரு உணர்ச்சியற்ற அரசாங்கம்” என கடுமையாக சாடியுள்ளார்.
வேறொரு பயனர், நாங்கள் ஒரு நாளைக்கு 12-14 மணிநேரம் உழைக்கிறோம், 33% நேரடி வரி, 3% கூடுதல் கட்டணம், 18% ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகளைத் திரும்பக் கொடுப்பதற்காக மட்டுமே நாங்கள் உழைக்கிறோம், மேலும் எங்களின் கடின உழைப்பில் 40% க்கும் குறைவாகவே எஞ்சி யுள்ளோம் என்றும், பணம் சம்பாதித்தாலும், நாங்கள் பொதுக் கல்வி, நிர்வாக அமைப்புகள், மருத்துவ வசதிகள் மற்றும் சமூகப் பாதுகாப்பைப் பெறுகிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
நரேந்திர மோடியின் கீழ் இந்திய ரயில்வேயின் வளர்ச்சியை ‘வெற்று வந்தே பாரத்’ ரயில்களில் காண்பிக்கும் காட்சிப் பதிவுகளை உருவாக்க செல்வந்தர்கள் பணம் பெறுகிறார்கள். ஆனால், சாதாரண இந்தியர்கள் இந்திய ரயில்களின் ஸ்லீப்பர் கோச்களில் கால்நடைகளைப் போல பயணிக்கின்றனர். அவர்களை மோடி அரசு கண்டுகொள்வது இல்லை என்பது மீண்டும் வெட்டவெளிச்சமாகி உள்ளது.
சாமானிய பயணிகளின் அவலங்களை கவனித்து அதை தீர்க்க வேண்டிய ரயில்வே துறை அதிகாரிகள் கண்டுகொள்வதும் இல்லை, யாரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. மக்கள் நலன் தொடர்பான இந்த குற்றச் சாட்டுக்களை களைவதில் ஆர்வம் காட்டாத மோடி அரசு, வந்தே பாரத், புல்லட் ரயில்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என விமர்சனம் எழுந்துள்ளது. இந்த காட்சிப் பதிவு தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. பயணி களின் கூட்டதுக்கு ஏற்ப ரயில்களையோ, அதிக பெட்டிகளையோ இணைக்க வேண்டிய அதி காரிகள், அதை செய்யாமல், பொதுமக்களின் நலனில் மெத்தனம் காட்டுவதாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ரயில்வே துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரயில்களில் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே இப்போது குறைந்த விலையில் குளிர்சாதன வசதி அல்லாத ரயில்களை அறிமுகப்படுத்த திட்ட மிட்டுள்ளது. புதிய ரயிலில் வந்தே பாரத் ரயில்களைப் போன்ற அம்சங்களுடன் இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத மற்றும் இரண்டாம் வகுப்பு 3 அடுக்கு ஸ்லீப்பர் பெட்டிகள் மேம்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.
“இந்தியா இன்னும் வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால், மக்களுக்கான வளங்கள் எங்கே? ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
2017-2018 ஆண்டு தரவுகளின்படி, மொத்த ரயில் பயணிகளின் போக்குவரத்தில் முன்பதிவு செய்யப்படாத வகுப்புகள் சுமார் 93 சதவிகிதம் ஆகும், அதே நேரத்தில் ஸ்லீப்பர் மற்றும் ஏசி வகுப்புகள் முறையே 4 சதவிகிதம் மற்றும் 2 சதவிகிதம் ஆகும்.