எல்லாவற்றிலும் காவி மயமா?

2 Min Read

ஒன்றிய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது ஹிந்தி செய்தி அலை வரிசையான தூர்தர்ஷன் நியூஸ் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றியுள்ளது.
ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

தற்போது டி.டி. நியூஸ் அலைவரிசை இலச் சினையையும் (லோகோவையும்) காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க் கட்சிகள், ஊடக வல்லு நர்களிடையே கடும் அதிருப்தியும், கண்டனங்களும் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கூறுகையில், ஒன்றிய அரசு நிறுவனங்கள் முழுவதும் காவி மயமாக்கல் நட வடிக்கை தொடர்கிறது. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதிப் பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர். ஜி 20 லோகோ விலும் காவி நிறம் காணப்பட்டது. இது சர்வாதிகார ஆட்சியின் ஒரு பகுதியாகும் எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், இது ஆரஞ்சு நிறம். ஜி20 மாநாட்டுக்கு முன் டி.டி. இந்தியா (ஆங்கில செய்தி சேனல்) லோகோவை அதே நிறத்தில் புதுப்பித்தோம். ஒரே குழுவிலிருந்து வரும் இரு செய்தி அலை வரிசைகள் தற்போது ஒரே தோற்றத்தைப் பின்பற்றுகின்றன எனக் கூறினார்.
தமிழில் “பொதிகை” என்ற பெயரில் ஒளிபரப்பி வந்த நிலையில் இப்பொழுது தூர்தர்ஷன் என்று மீண்டும் மாற்றியுள்ளனர். இதனை எதிர்த்து பல ஆண்டு களுக்கு முன்பே தமிழ்நாட்டில் எதிர்ப்புக் குரலும் போராட்டமும் நடந்ததுண்டு. இப்பொழுது – எல்லோரும் தேர்தல் பணியில் ஈடுபட்டுக் கொண் டிருந்த நேரம் பார்த்து, தமிழர்கள் உணர்வினை மதிக்காமல் ‘பொதிகை’யைப் புறந்தள்ளி தூர்தர்ஷன் (DD) என்று மாற்றி விட்டனர்.

சாலைகளில் மைல் கற்களிலும் ஹிந்தியில் எழுத ஆரம்பித்துள்ளனர்.

தமிழர்கள் தூங்கிக் கொண்டு இருக் கிறார்கள் என்று மனப்பால் குடிக்க வேண்டாம்! ‘கருஞ்சிறுத்தை கண் விழித்தால் தெரியும் சேதி’ என்ற புரட்சிக் கவிஞரின் வீர வரிகளை நினைவூட்டுகிறோம். உத்தரப்பிரதேசத்தில் அரசு அலுவலகங்களில் எல்லாம் காவி நிறம் பூசப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாடு – உத்தரப்பிரதேசமல்ல – நினைவிருக்கட்டும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *