சென்னை, செப்.15 ஹிந்தி தினம் குறித்த உள்துறை அமைச் சர் அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். ஹிந்தி மொழி குறித்த அமித்ஷாவின் கருத்துக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டு துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில், “ஹிந்தி தான் நாட்டு மக்களை ஒன்றி ணைக்கிறது – பிராந்திய மொழி களுக்கு அதிகாரமளிக்கிறது” என்று வழக்கம் போல தனது ஹிந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். ஹிந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து. தமிழ்நாட்டில் தமிழ் – கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் ஹிந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக் கிறது? நான்கைந்து மாநிலங் களில் பேசப்படும் ஹிந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றி யத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. ஹிந் தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என உதயநிதி தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி – தமிழ்நாட்டையும் கேரளாவையும் ஹிந்தி ஒருங்கிணைக்கிறதா?
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books