காந்திநகர்,ஏப்.21- குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் வேட்புமனு தாக்கல் முடிவு செய்தி ருந்த ‘விஜய முகூர்த்தத்தை’ தவற விட்டதால், மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்வதாகக் கூறி திரும்பச் சென்றார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்தின் நவ்சாரி மக்களவைத் தொகுதி வேட்பாளரும், தற் போதைய எம்.பி.யுமான சி.ஆர்.பாட்டீல் வியாழக்கிழமை பகல் 12.39 மணிக்கு ‘விஜய முகூர்த்த’ நேரத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்தி ருந்தாராம்.
அதன்படி, அவர் வேட்புமனு தாக் கல் செய்வதற்காக ஆதரவாளர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் புடை சூழ பாஜக அலுவலகத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக அவரது வாகனப் பேரணி மெதுவாகவே சென்ற தாம்.
அவர் ஆட்சியர் அலுவலகத்தை எட்டியபோது நேரம் பகல் 12.39 மணியைக் கடந்திருந்தது. ‘விஜய முகூர்த்தம்’ கடந்துவிட்டதால் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று சி.ஆர் பாட்டீல் முடிவெடுத்தார். இதையடுத்து, அவர் மனு தாக்கல் செய்யாமலேயே வீடு திரும்பிவிட்டாராம். அடுத்த நாளில் மனுததாக்கல் செய்வார் என்ற கூறப்பட்டதாம்.