கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

21.4.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ வட நாட்டில் குறிப்பாக உ..பி.யில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது, அகிலேஷ் பேட்டி.
♦ ஜனநாயகத்தைக் காப்பாற்ற, கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது, பிரியங்கா கருத்து.
♦ மோடியின் தேர்தல் பிரச்சார வசதிக்காகவே ஏழு கட்ட தேர்தல், மம்தா குற்றச்சாட்டு.
♦ பாஜகவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் மன நிலை உள்ளது, சித்தராமைய்யா.
♦ பாஜகவின் பிரதமர் போல மோடி பேசுகிறார். நாட்டில் விலைவாசி ஏற்றம், வேலையின்மை குறித்து பேசுவதில்லை, சரத் பவார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ எலான் மஸ்க் இந்திய வருகை திடீர் ரத்து: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டரில், ‘‘எலான் மஸ்க் இந்தியாவில் ஆட்சி மாற்றத்திற்காக காத்திருக்கிறார். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் எங்களின் பிரதமர், மஸ்கை வரவேற்பார்’’ என கூறி உள்ளார்.
♦ ‘நமது சொந்த அறிவியலைச் செய்யாமல், சொந்தமாகத் தொழில் நுட்பத்தை உருவாக்காமல் உயர் வளர்ச்சி சாத்தியமில்லை’: முதன்மை அறிவியல் ஆலோசகர் அஜய் குமார் சூட்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
றீ நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தேர்தல் பத்திரத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 4 லட்சம் கோடி பொதுப் பணத்தை கொள்ளையடித்த பிறகு, அவர்கள் “கொள்ளையைத் தொடர விரும்புகிறார்கள்” என்று சீதாராமன் கூறிய கருத்துகளுக்கு காங்கிரஸ் பதிலடி..

தி இந்து:
♦ தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட வாக்குகளை குறிவைத்து சமாஜ்வாதி கட்சி தேர்தல் வியூகம்.

தி டெலிகிராப்:
♦ விவசாயிகளான எங்களை மோடி ஏமாற்றி விட்டார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கு வதாக அவர் உறுதியளித்தார், ஆனால் 2014-அய் ஒப்பிடும்போது நாங்கள் ஏழைகளாகி விட்டோம். கடுமையான தண்ணீர் பற்றாக்குறை உள்ளது மற்றும் பயிர் விளைச்சல் கணிசமாகக் குறைந்துள்ளது. எனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக நான் ஊரக வேலைவாய்ப்பின் கீழ் வேலை தேட வேண்டும்’ என நாக்பூர் விவசாயி கோபம்.
♦ பாஜகவில் அதிகாரப் போட்டி: மோடிக்கு அடுத்தபடியாக ஆதித்யநாத்தின் புகழ் இரண்டாவதாக உள்ளது என்றும், மோடியின் ‘இயற்கையான வாரிசாக’ தன்னைக் கருதும் தற்போதைய ஆட்சியில் நம்பர் 2 ஆக இருக்கும் ஷாவுக்கு இது சவாலாக இருப்பதாகவும் பாஜகவில் பலர் நம்புகிறார்கள்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *