பறக்கும் படை இனி மாநில எல்லையில் மட்டுமே நீடிக்கும் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி தகவல்

2 Min Read

சென்னை, ஏப். 21- தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், பறக்கும் படை மற்றும் நிலைக்குழுக்கள் சோதனை திரும்பப் பெறப்படும். மாநில எல்லைகளில் மட்டும் சோதனை நீடிக்கும் என்று தமிழ் நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் நடத்தை விதிமீறல்களைத் தடுக்க அனைத்து தொகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் நிலைக் குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்திருந்தது. அவை, வாகனச் சோதனை மற்றும் புகார்கள் அடிப்படையில் வீடுகள், அலுவல கங்களில் சோதனையில் ஈடுபட்டு வந்தன. அந்த வகையில், தமிழ்நாட் டில் ரூ.174.85 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1,083.77 கோடி மதிப் பிலான தங்கம் உட்பட ரூ.1,301 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு 19.4.2024 அன்று நடை பெற்றது, வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில், பறக்கும் படை மற்றும் நிலைக்குழுக்கள் சோதனையை திரும்பப் பெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில், பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண் காணிப்பு குழுக்கள் கலைக்கப் படுகின்றன. இதுதொடர்பான அறிவுறுத்தலை தேர்தல் ஆணை யம் வழங்கியுள்ளது. இருப்பினும் தேர்தல் நடத்தை விதிகள் தமிழ் நாட்டில் அமலிலேயே உள்ளன.
மாநில எல்லையில் தொடரும்:

அதேநேரம், கேரளா, கரு நாடகா மற்றும் ஆந்திர மாநிலங் களில் தேர்தல் நடைபெறும் வரை அம்மாநிலங்களை ஒட்டியுள்ள தமிழ்நாடு எல்லை மாவட்டங் களில் மட்டும் தேவைப்படும் இடங்களில் பறக்கும் படை மற்றும் நிலைக் குழுக்கள் தங்கள் பணி களைத் தொடரும். உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லும் ரொக் கத்துக்கான உச்சவரம்பு ரூ.50 ஆயி ரம் என்பதில் மாற்றம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு தலைவர் விக்கிரமராஜா, இந்த அறிவிப்பு வணிகர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறி, தேர் தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *