தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15.9.2023) அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி, காஞ்சிபுரம், மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம். மகாலட்சுமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் கே. சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.
அறிஞர் அண்ணாவின் 115ஆம் ஆண்டு பிறந்த நாள் காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
Leave a Comment