சென்னை, ஏப்.20- சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நல அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் திருநங்கை ராதா. இவரை இந்தத் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலராக மாவட்ட தேர்தல் அதிகாரி நியமித்திருந்தார்.
இது தொடர்பாக தேர்தல் அலுவலர் ராதா கூறும்போது, எனக்கு இப்பணிவழங்கி இருப்பது ஒட்டுமொத்த திருநங்கைகளுக்கே கிடைத்துள்ள மிகப் பெரிய அங்கீகாரமாக நினைத்து மகிழ்கிறேன்.
பயிற்சி வகுப்பில் நான் கலந்து கொண்டபோது, மற்றவர்கள் என்னைப் பார்த்து நீங்களும் தேர்தல் அலுவலரா என்று ஆச்சரியத்தோடு கேட்டனர்.
நானும் தேர்தல் அலுவலர்தான் என்று தெரிவித்தேன். இந்த பணியின் மூலம் திருநங்கைகள் மீதான தவறான கண்ணோட்டம் விலகும் என்றார்.
இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறும்போது, திருநங்கைகளும் சமூகத்தில் மதிக்கப்படக் கூடியவர்கள்.
அந்த வகையில் அவருக்கு பணி ஒதுக்கப் பட்டுள்ளது. இது அவர்களுக்கான அங்கீகாரமாகவும் இருக்கும் என்றார்.
சென்னையில் தேர்தல் அலுவலராக பணியாற்றிய திருநங்கை
Leave a Comment