காஞ்சிபுரம், ஏப். 20- திருப்பெரும்புதூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் மக்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். 2024 மக்களவைத் தேர்தல் நேற்று (19.4.2024) நடை பெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப் பெரும்புதூர் சட்டப் பேரவை தொகுதியில் சுமார் 365 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் அந்தந்த மய்யங்களில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக தொடங்கி நடை பெற்றது. வாக்குப்பதிவு இயந்திரம் பழுது திருப்பெரும்புதூர் ஒன்றி யத்திற்குட் பட்ட ஆயா கொளத் தூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மய்யத்தில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை.
இதனால் வாக்குகள் பதிவாகவில்லை. நீண்ட நேரமாக பழுது சரி செய்யப்படா ததால் வேறொரு இயந்திரம் மாற் றப்பட்டு காலை 8:30 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. நான்கு வாக்குச்சாவடிகளில் மாற் றப்பட்ட இயந்திரம் மாத்தூர் ஊராட்சியில் அமைக்கப் பட் டுள்ள வாக்குச்சாவடி மய்யத்தில் வி.விபேட் இயந்திரம் பழுதாகியது. சிக்கராயபுரம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி எண் 175இல் விவிபேட் இயந்திரம் மதியம் 2 மணிக்கு மேல் பழுதாகி இரண்டு மணி நேரம் சரி செய்யாததால் வேறு இயந்திரம் மாற்றப்பட்டு வாக்குப்பதிவு நடை பெற்றது. திருமங்கலம் ஊராட்சி யில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி எண் 51இல் வாக்குப்பதிவு இயந் திரம், விவிபேட், ஒப்புகைச் சீட்டு இயந்திரம் உள்ளிட்ட அனைத்து இயந்திரங்களும் பழுதாகியது. அனைத்து இயந்திரங்களும் மாற்றப் பட்டு வாக்குப்பதிவு நடைப்பெற்றது.