20.4.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழ்நாட்டில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மணிப்பூர் மாநிலத்தின் மொய்ராங்காம்பு சஜேப் எனும் பகுதியில் வன்முறை. வாக்கு எந்திரங்களுக்கு தீ வைப்பு. துப்பாக்கியுடன் வன்முறைக் கும்பல் ஓடுவதும், அதை காவல்துறையினர் அமைதியாக வேடிக்கை பார்க்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நாடு எதிர்கொள்ளும் முதல் மற்றும் மிகப்பெரிய பிரச்சினை அதன் வேலைவாய்ப்பு நிலைமை. வழக்கமான இந்தியர் மிகவும் இளமையாக இருக்கிறார், சராசரி வயது சுமார் 28 ஆண்டுகள் என்கிறார் பேராசிரியர் அமிர்தயா லாகிரி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*’அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது குறித்து பேசும் பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்’; பாஜகவை விட நிதிஷ் குமார் ஆபத்தானவர்: பீகார் பேரணியில் இருந்து மல்லிகார்ஜூனா கார்கே அறிக்கை
தி இந்து:
*’மோடியிடம் இருந்து எங்களுக்கு கிடைத்த ஒரே உத்தரவாதம், அவருடைய வாக்குறுதிகள் அனைத்தும் மீறப்படும் என்பது தான் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கிண்டல்.
* வாக்குகளை பெறுவதற்கு பாஜக “ஒரு பிரச்சி னையை” (மதம் – கோவில்) பயன்படுத்துவதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை.
– குடந்தை கருணா