கவிஞர் கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
சனாதன
சர்ப்பம்
சீறுகிறது.
ஆட்சி அதிகார
அரண்மனையில்
துப்பாக்கி
சத்தம்.
சனாதனமென்றால்
மாற்றம் கூடாதாம்!
மாற்ற மொன்றே
மாறாதது என்பது
இயற்கையின்
சட்டம்.
மனுவாதிகளுக்குத்
தெரியாதா?
தெரியும்தான்,
ஆதிக்கத் தேனை
ருசித்த நாக்குகள்
அடங்குமா?
ஒன்றை மட்டும்
உணர வேண்டும்.
ஒரு நூற்றாண்டு
வேட்டுச் சத்தம்
வெடிப்பது
தமிழ் மண்ணில்!
‘இந்தியா’தான்
வந்து விட்டதே!
புரியவில்லையா?
புயற்காற்றாம்
சுனாமி
பெரியார் என்னும்
பெருங்கடலில்
மய்யம் கொண்டு
வீசப் போகிறது.
வடக்குத்
திசைநோக்கி,
திராவிடம்
என்றால் திணை
அஃறிணையல்ல!
அல்லது அகற்றி
அறமது செய்வது!
ஆறறிவை அடைக்கும்
தாழ்ப்பாளை உடைப்பது
அனைவருக்கும்
அனைத்தும்
என்னும்
தாய்ப்பால் மருந்து
தன்மான உணர்வுக்கு
தத்துவ விருந்து
சமூக நீதிக்கு
திரியின்
விளக்கு!
பெரியாரைப்
பின்பற்று
திறவு கோல்
ஆங்கே!