கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

19.4.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மேற்கு வங்கத்தில் ராம நவமி விழாவில் திட்டமிட்டு வன்முறையை பாஜக நடத்தியது – மம்தா குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தென்னிந்தியாவில் 130 இடங்களில் 115 இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றும், ரேவந்த் நம்பிக்கை.
* நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்றால் அரசியல் சாசனம் சிதைக்கப்படும். இது சாதாரண தேர்தல் கிடையாது. நாட்டின் அரசமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்று வதற்கான தேர்தல். – காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி
* 400 இடங்கள் என்கிறார் மோடி. அதில் பாதி வெல்வதே கடினம் என்கிறார் அரசியல் ஆய்வாளர் மோகன் குருசாமி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “2014 வரை நாட்டின் கடன் 53.87 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அது எப்படி 205 லட்சம் கோடியாக உயர்ந்தது? பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இந்த விடயத்தில் மவுனம் ஏன்?” என்று மகாராட்டிர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபால் தாதா திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விவிபிஏடி மூலம் சரிபார்க்க கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
தி இந்து:
*வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸுக்கு சாதகமாக உள்ளது என்கிறார் ஜெய்ராம் ரமேஷ்
தி டெலிகிராப்:
* வேலை கிடக்கட்டும். முதலில் உயிருடன் இருக்க வேண்டாமா? இது தான் மோடியின் புதிய இந்தியா – இசுலாமியர்களின் குமுறல்.
* பெண்களின் குடும்பத்திற்கு அவர்கள் செய்யும் பங்களிப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பேச்சு.
* தனது 10 ஆண்டு கால ஆட்சியின் செயல்திறன் ‘வெறும் டிரெய்லர்’ என்ற மோடியின் பேச்சுக்கு, டிரெய்லரிலேயே விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதில் முழு படமும் வந்தால் என்னாவது என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் விமர்சனம்.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *