கவர்மெண்ட் என்றால் ஆளுவது என்பதாகும். யார் யாரை ஆளுவது? மக்களை பாடுபடாத சோம்பேறி வஞ்சகர்களா ஆளுவது? இந்த நிலை இல்லாத நிருவாகத்துக்கு என்ன பெயர்? பஞ்சாயத்து என்று பெயர். இது ஒரு பொறுப்பை நிருவகிப்பதாகும். எல்லா மக்களையும் சமமாகத் கருதி சம உரிமை கொடுத்து அது பறிபோகாமல் பார்ப்பதுடன் சம நீதிப்படி நிருவகிப்பதுமாகும். இதில் ஆட்சி, ஆளுமை, அதிகாரம் என்பனவற்றுக்கு ஏது இடம்?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1297)
Leave a Comment