♦ தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஜனநாயகத்தை மீட்கும் மருத்துவர்கள் இரண்டு பேர். ஒருவர் ஒப்பற்ற நம் திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இன்னொருவர் இளந்தலைவர் இராகுல் காந்தி.
♦ பதவிக்கான கூட்டணி பா.ஜ.க. அணி
மக்கள் உதவிக்கான கூட்டணி இந்தியா அணி.
♦ பா.ஜ.க.நடத்துவது வெறுப்பு அரசியல்!
நாம் நடத்துவது பொறுப்பு அரசியல்!!
♦ யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்று சொல்லி வந்தோம். இப்போது யார் வரப் போகிறார்கள் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.
♦தேர்தல் பத்திரமாக நடக்க வேண்டும் என்று நாங்கள் பணியாற்றுகிறோம். ஆனால் பா.ஜ.க.வோ பத்திரங்களை வைத்து தேர்தலை நடத்துகிறார்கள்.
♦ பா.ஜ.க.தேர்தல் அறிக்கை என்பது தேர்தல் அறிக்கை அல்ல! அது தேறாத அறிக்கை.
♦மோடி முதலில் விற்றது குஜராத் டீ! இப்போது விற்பது கியாரண் டீ!!
♦வெல்லப் போவது இந்தியா கூட்டணி தான். ஆனால் வாக்குப்பெட்டி கருத்தரிக்காமல் இருக்க வேண்டும்.
♦இதுவரை ஒன்பது முறை தமிழ்நாட்டிற்கு வந்திருக் கிறார் பிரதமர் மோடி. நூறு முறை வந்தாலும் சரி, ஏன்? தமிழ்நாட்டிலேயே குடியேறினாலும் சரி தமிழ் மக்கள் உங்களை ஏற்க மாட்டார்கள்.
♦ கடந்த பத்து ஆண்டுகளாக பொய்யை மட்டுமே பேசிவந்த பிரதமர் மோடி ஒரே ஒரு உண்மையை பேசியுள்ளார். இதுதான் நான் கடைசியாக தமிழ்நாட்டிற்கு வரும் தேர்தல் பயணம் என்று!
♦ மகா நடிகன் என்றொரு திரைப்படம் நீண்ட நாட் களுக்கு முன்பு வந்து விட்டது. இப்போது எடுத்திருந்தால் பிரதமர் மோடியை வைத்து எடுத்திருப்பார்கள்.
சசமூக நீதிக்கு நாங்கள்தான் காவலர்கள் என்று சொல்லும் ஒருவர் பிரதமர் மோடி அவர்களை கட்டித்தழுவி வரவேற்ற போது அப்படியே காதோடு காதாக பேசி ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்திட வேண்டும் என்று கூறியிருக்கலாமே!!
சதிராவிட மாடல் ஆட்சியில் தாய்மார்கள் பொன் நகை யோடு இருப்பதை விட புன்னகையோடு இருக்கிறார்கள்.
– தேர்தல் பரப்புரைப் பயணத்தில் தமிழர் தலைவர்