போதைப் பொருள் தி.மு.க. ஆட்சியில்தான் என்று பிரதமர் குற்றம் சாட்டுகிறாரே உண்மை என்ன?
இந்த புள்ளி விவரத்தை பாருங்கள்
1. 2022-இல் பறிமுதல் செய்யப்பட்ட “அபின்” போதைப் பொருட்கள்
முதல் இடம் – ராஜஸ்தான் – ஒரு லட்சத்து 47 ஆயிரம் கிலோ
6ஆம் இடம் – குஜராத் – 12 ஆயிரத்து 838 கிலோ
20ஆம் இடம் – தமிழ்நாடு – 21 கிலோ
2. மொத்தமாக குஜராத்தில் 2022ஆம் ஆண்டு மட்டும்
ரூ.5 ஆயிரத்து 137 கோடி மதிப்புள்ள 31 ஆயிரம் கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்
3. ஒரே முறையில் அதிகபட்சமாகக் கைப்பற்றப்பட்டது அதானியின் முந்த்ரா துறைமுகத்தில்
2 ஆயிரத்து 988 கிலோ போதைப் பொருள்
குட்கா குற்றச்சாட்டு எந்த ஆட்சியில்? அப்போது கூட்டணி யாருடன்?
அதானி யாருடைய நெருங்கிய நண்பர் – ஒரு துறைமுகமே (குஜராத்தில்) அவருக்குக் கிடைத்தது யாரால்? எப்படி? உலகறிந்த செய்தி! கண்ணாடி வீட்டிலிருந்து பிரதமர் மோடி தி.மு.க. என்ற கற்கோட்டையை நோக்கி கல்லெறிய வேண்டாம்.
– அறந்தாங்கியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் ஆசிரியர் கி. வீரமணி (16.4.2024)