தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை (17.9.2023) முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (15.9.2023) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்பு அவரது தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், கு.செல்வப்பெருந்தகை, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வளர்ச்சி ஆணையர் / முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர்.நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியார் பிறந்த நாள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை – ‘சமூகநீதி நாள்’ உறுதிமொழி ஏற்பு!
Leave a Comment