மோடி தலைமையிலான பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அரசின்
10 ஆண்டு ஆட்சியின் நிறைவேறாத ‘கியாரண்டீ’கள்
வாக்காளப் பெருமக்களே! விழித்துக்கொண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்!
நேற்றைய முன்தினம் (15.4.2024) தொடர்ச்சி…
துரோகம் – 8
வஞ்சிக்கப்பட்ட மகளிர்
சாதாரணப் பெண்களும், சிறுபான்மையினரான மூன்றாம் பாலின மகளிரும் பாஜக ஆட்சியில் பெருமளவு ஏமாற்றப்பட்டு துரோகம் இழைக்கப்பட்டு உள்ளார்கள். இவர்களுடைய அவல நிலை குறித்துச் சிந்திப்போமா?
பா.ஜ.க. என்ன வாக்குறுதி அளித்தது?
1. பெண்கள் எல்லா விதத்திலும் கவுரவிக்கப்படு வார்கள் (மகிளா சம்மான் திட்டம்)
2. பெண் பிள்ளைகள் காப்பாற்றப்பட வேண்டும் (பேட்டி பச்சாவ் திட்டம்)
3. பெண்களுக்கு வேலை வாய்ப்புகள்
4. பெண்களுக்கு அரசியல் களத்தில் ஒதுக்கீடு
5. மூன்றாம் பாலினத்தைச் சார்ந்த சிறுபான்மைப் பெண்களுக்கு சட்டப்படி பல சலுகைகளும், வளர்ச்சித் திட்டங்களும்
உண்மையில் நடப்பது என்ன?
1. குடும்பச் சுமையை தாங்கிக் கொண்டிருக்கும் பெண்கள் பணவீக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
2. வேலையின்மை நாடு முழுவதும் நிலவுவதாலும், ஆண்கள் புலம்பெயர்ந்து பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று விடுவதாலும் பெண்களின் குடும்பப் பொறுப்பு களும் பணிச் சுமையும் அதிகரித்து வருகிறது.
3. பெண்களுக்கு போதுமான சத்துணவு கிடைப்ப தில்லை. மற்ற நாட்டுப் பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அவர்கள் மிகவும் பலவீனமாகவும் ஆரோக்கியமற்றவர்களாகவும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான பெண்கள் நடமாடும் இயந்திரங்களைப் போலவே உள்ளனர். ஆணாதிக் கத்தால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதே உண்மை.
4. பெண்களுக்கு போதுமான வேலை வாய்ப்புகள் இல்லை. இருக்கும் சொற்பப் பணியிடங்களுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. பெரும்பாலான பெண்கள் வாழ்வாதாரமின்றி விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
5. அமைப்பு சாரா நிறுவனங்களில் மோசமான பணிகளில் பல பெண்கள் நியமிக்கப்படுகிறார்கள். மிகக் குறைந்த ஊதியம் பெற்று பல பெண்கள் கடுமையாக உழைத்து துன்பங்கள் அனுபவித்து வருகிறார்கள். சிறு, குறு நிறுவனங்களில் பல பெண்களின் மாத வருமானம் அதிகபட்சம் 5000 ரூபாயாகவே உள்ளது.
6. கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பெண் களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. 2022இல் 4,28,278 பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளன. பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.
7. மூன்றாம் பாலினப் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன. அவர்கள் பெருமளவு இழிவுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் இந்த பாஜக ஆட்சியில் மனிதர்களாகவே மதிக்கப்படுவ தில்லை.
8. அரசியல் களத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 2034ஆம் ஆண்டில்தான் என்று வேடிக்கையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது பா.ஜ.க. – தேர்தல் சமயத்தில் பொய்யான வாக்குறுதிகளால் நாட்டு மகளிர் அனை வருமே ஒட்டு மொத்தமாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.
9. பெண்களின் வாக்குகளை தந்திரமாகப் பெற பாஜக அரசு பொய்யான பல வாக்குறுதிகளை இப்படி அள்ளி வீசி வருகிறது. இது துரோகமல்லவா?
இவற்றுக்கெல்லாம் உண்மையான காரணம் என்ன?
1. பாஜகவும், ஆர்எஸ்எஸ், சங்பரிவாரும் ஆணா திக்கத்தை ஆதரிக்கும் அமைப்புகளே! பெண்களின் உரிமைகளுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்க ளையே எதிர்க்கும் கூட்டம் அவை. அம்பேத்கரின் “Hindu Code Bill” கூட இவர்களுடைய எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.
2. பாஜகவும், சங்பரிவாரும் வலியுறுத்துவது – பெண்கள் ஆண்களுக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டி யவர்கள், பிள்ளை பெறுவதும், அவர்களை வளர்ப்பதும், குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதும் மட்டும்தான் அவர்களுடைய பணி.
எவ்வளவு குறுகிய புத்தியுள்ள கூட்டம் இது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
3. பல பாஜக தலைவர்கள் பெண்களை எவ்வளவு கேவலமாக நடத்தி வந்துள்ளார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். பட்டியலிட்டால் அத்தனை கொடுமைகளையும் அடக்க முடியாது. பாஜக ஆளும் பல மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நூற்றுக்கணக்கில் நடந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில். மணிப்பூரில் நடந்த கொடுமைகளை மன்னிக்க முடி யுமா? மோடி பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவு மில்லை. அனுதாபம் தெரிவிக்கவுமில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் தப்பி சுதந்திரமாக உலவி வரு கிறார்கள். நாட்டின் பிரதமரே பெண்களின் துயரங்களைப் பற்றி கவலைப்படாதபோது அவர்கள் ஏன் பயப்படப் போகிறார்கள்?
4. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறை வேற அவர்கள் 2034 வரை காத்திருக்க வேண்டும் என்ற முடிவை எண்ணி நாம் சிரிப்பதா? அழுவதா? இதுவா மகளிர் நலனில் அக்கறையுள்ள அரசு?
5. மூன்றாம் பாலினத்து மகளிர், அரசு அதிகாரிகள் நடத்தும் மருத்துவப் பரிசோதனைக்கு இணங்க வேண் டும் என்ற அருவருப்பான அறிவிப்பும் பாஜக ஆட்சியில் வெளிவந்துள்ளது. மூன்றாம் பாலின மகளிருக்கு திருமணம் செய்து கொள்ளும் உரிமை இல்லையாம். அவர்கள் குழந்தைகளை சுவீகாரமாகவும் பெற்றுக் கொள்ளக் கூடாதாம். அவர்களுக்கு சொத்துரிமையும் கிடையாதாம். இவை எல்லாமே பா.ஜ.க. அரசு கூறி யுள்ளவை. இயற்கையின் கோணல் புத்தியால் பாலின வேற்றுமைக்கு ஆளானவர்களும் மனிதர்கள்தானே? அவர்களுக்கு இப்படி அநீதி இழைக்கப்படலாமா?
6. மூன்றாம் பாலினப் பெண்கள் உள்பட அனைத்து மகளிருக்கும் வாழ்க்கையில் வளம் பெற உதவுவதாக பொய்யான உறுதிமொழி அளித்துள்ளது பாஜக. – எல்லாமே கபட நாடகம். அனைத்து மாநிலப் பெண் களும் விழித்தெழுந்து இந்த மக்கள் விரோத பாஜக அரசை விரட்டியடிக்க வேண்டும்.
தமிழில்: எம்.ஆர்.மனோகர்
துரோகம் – 9
இந்திய அரசமைப்புச் சட்டத்தை திட்டமிட்டு அழித்திடும் செயல்
வாக்குறுதி அளிக்கப்பட்டது என்ன?
‘தர்மம்’ மீண்டும் நிலைநாட்டப்படும்.
பின்னர் நடந்தது என்ன?
♦ ‘தர்மம்’ என்பதற்கு உண்மையான பொருள் ‘நீதி’ ஆகும். தர்மம் நிலைநாட்டப்படும் என்பது நீதி நிலைநாட்டப்படும் என்பதாகும். ஆனால் பா.ஜ.க. என்ன செய்து கொண்டிருக்கிறது? மதத்தின் பெயரால் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது. மதங்களுக் கிடையே சச்சரவை மூட்டி, ஜாதிகளுக்கிடையே பகைமையை எண்ணெய் ஊற்றி வளர்த்து தனது அரசியல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்திடுவதில் முனைப்பாக உள்ளது. இந்த செயல் தர்மத்தை நிலைநாட்டுவதாகாது. மக்களுக்கு எதிரான வஞ்சகச் செயலாகும். இது அதர்மம் ஆகும்.
♦ பா.ஜ.க.வின் கூட்டு பெரும் கார்ப்பரேட் நிறு வனங்களுடனானது; இதனுடைய செயல் திட்டமானது, கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்மைக்கானது; மக் களைத் தமது ஆதாயத்திற்கு ஏற்ற வகையில் கையாள்வது; தவறான ஆள்வினையால் அப்பட்டமாக பொதுநிதியையும், பத்திரங்களாகக் கொள்ளையடிப்பது – இவைகள் அத்தனையையும் செய்து முடித்திட மக்களின் கவனத்தை வேறு திசையில் திருப்புவதை செய்து வருகிறது. இத்தகைய இழிவான நடவடிக்கை இருக்கும் போதிலும் தனக்காக மக்களின் ஆதரவினை நிச்சயப்படுத்திட மதப் போர்வை கொண்டுள்ளது.
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றின் மூலம் குடியுரிமை என்பதை மத அடிப்படையில் வளைத்திடும் ஒரு தீய செயலை சட்ட ரீதியாக்கியுள்ளது. இதனால் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்களுக்கிடையே ஒரு பிரிவினைச் சுவரை எழுப்பி, மனிதநேயமற்ற, கெட்ட எண்ணமுடைய நடவடிக்கையின் மூலம் சிலரை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கி வருகிறது; மற்றவர்களிடமிருந்து அவர்களைப் பிரித்து வைத்திடும் செயலைக் கடைப் பிடித்து வருகிறது.
♦ நாட்டு நிலவர உண்மையைச் சொல்பவர்கள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். ஒன்றிய அரசானது தன்னிச்சை அதிகாரமிக்கதாக மாறி வருகிறது. படுகொலை செய்யப்பட்ட கருத்து மறுப் பாளர்களான கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோர் சிந்திய ரத்தத்தின் கனவுகள் நீடித்து வருகின்றன. சமூக நீதிக்காகப் போராடிக் குரல் கொடுத்தவர்களின் வாய்கள் அடக்கப்பட்டுள்ளன. அவர்கள் சிறையில் வைக்கப் பட்டனர். அருட்தந்தை ஸ்டேன் சுவாமி, ஆனந்த் டெல்டம்டே, வாரவராவ், பேரா.ஜி.என்.சாய்பாபா, உமர் காலித் மற்றும் பலர் அப்படிக் குரல் கொடுத்தவர்களில் அடங்குவர். (நீதிமன்றத்தில் முறையீடு செய்து சிலர் பிணை மற்றும் விடுதலை பெற்று வெளியில் வந்து உள்ளனர்) ஸ்டேன் சுவாமி அவர்களுக்கு சிறையில் உடல் நிலை மோசமான நிலையிலும் அடிப்படை மருத்துவச் சேவைகள் கூட வழங்கப்படவில்லை. அவர் சிறையிலேயே செத்து மடிய நேர்ந்தது.
ஸ் எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளிலும், அலு வலகங்களிலும், வணிகக் கூடங்களிலும் வருமானவரித் துறை – அமலாக்கத் துறை – சிபிஅய் ஆகிய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அமைப்புகளைக் கொண்டு சோதனை நடத்தப்படுகிறது. இதனால் அந்தத் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, வருவதால் தங்களின் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணையும் படி நேரிடுகிறது.
♦ எந்தவித, விவாதமுமின்றி நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சட்டங்களாகி வரு கின்றன. எதிர்த்துக் குரல் எழுப்பி கேள்வி கேட்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிக நீக்கம் செய்யப் பட்டு, அவையின் நடவடிக்கைகளில் பங்கேற்க விடாமல் வாய் மூடப்பட்டுள்ளனர். ஜனநாயகம் ஒடுக் கப்படுகிறது. எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத் திற்காக பா.ஜ.க. கனவு காணுகிறது.
இவையனைத்திற்கும் காரணங்கள் என்ன?
♦ ஜனநாயக நெறிகளை, அரசமைப்புச் சட்டத்தி னைக் கடைப்பிடிக்கும் கட்சியாக பா.ஜ.க. இல்லை; அதன் கருத்தியல் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சும் இல்லை.
♦ பல்வேறு கூட்டங்களில், “அரசமைப்புச் சட்டத்தை மாற்றிடுவதுதான் எங்களது இலக்கு” என பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அனந்தகுமார் பேசி வரு கிறார். ‘இந்து மதம்’ என்பதன் பெயரால் ‘மனுஸ்மிருதியை’ மீண்டும் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்பது அவர்களின் முதன்மைத் திட்டமாக உள்ளது. ‘இந்துப் பழைமை’ என்பதன் பெயரால் அரசமைப்புச் சட்டத்தை நிர்மூலப்படுத்தி முழு அதிகாரத்தையும் கையில் எடுப்பது அவர்களது நோக்கமாக உள்ளது.
♦ சுதந்திரம், சமத்துவம், சகதோழமை மற்றும் சமூகநீதி – இவைகளே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்புகளாகும். பா.ஜ.க. இந்த நான்கு கொள் கைகளையும் எதிர்க்கிறது. மக்களின்; ஊடகங்களின், எதிர்க்கட்சிகளின், ஜனநாயகத்திற்காக. குரல் கொடுப்ப வர்களின் பேச்சு சுதந்திரத்தினை மட்டுப்படுத்தி வரு கிறது. பொருளாதார, சமூக சமத்துவம் ஏற்படாதவாறு செயல்படுகிறது. மக்கள் நல அரசு, மானிய உதவிகள், அரசு நலத் திட்டங்கள் என அனைத்தையும் நிர்மூல மாக்கி வருகிறது. பலதரப்பட்ட மதத்தினரும் இணைந்து வாழும் நிலையை அழிக்க விரும்புகிறது. அவர்களுக் கிடையே இணக்கமான நிலை இருக்கக் கூடாது என கருதுகின்றனர்.
♦ எதேச்சதிகார ஆட்சி அதிகாரத்தினை கைவிடாமல் அத்தகையவற்றை ஒருங்கிணைக்க முனைகிறது. பேராசை கொண்ட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தங்கு தடையற்ற வசதி வாய்ப்புகளை உருவாக் கவும், உயர்ஜாதியினரின் ஆதிக்கம் சமூகத்தில் மீண்டும் நிலவிடவும் முயற்சி எடுத்து செயல்பட்டு வருகின்றனர்.
♦ ஒட்டு மொத்தத்தில் மதப்போர்வையில் ஒரு கார்ப் பரேட் ஏகாதிபத்திய ஆட்சியை அமைத்திட பா.ஜ.க. வானது முயன்று வருகிறது. இதற்காக, எந்த வகையிலாவது – சட்டத்திற்குப் புறம்பான வழிகளைக் கடைப்பிடித்தாவது தேர்தலில் வெற்றிபெற அந்தக் கட்சி இறங்கியுள்ளது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் – முழு அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் உயர்ஜாதியினர் மற்றும் பெரும் பணக்காரர்கள் வசம் நிலைத் திடும் வகையில் ஆட்சி அதிகார முறையை மாற்றி நிறுவனப்படுத்தி விடும். ‘இந்து நாடு’ என்பதும் ‘தர்ம பரிபாலனம்’ என்பதுவும் உயர் ஜாதியினரின் மேட்டி மைத் தன்மையை நிலைநிறுத்தவே பயன்படும். இந்திய ஜனநாயக, அரசமைப்புச் சட்டத்தை அர்த்தமற்றதாக்கி, நமது நாட்டை மதத்தின் பெயரால் கொடுங்கோன்மை ஆட்சிக்கு கொண்டு சென்று விடுவார்கள்.
மீண்டும் பள்ளத்திலே விழலாமா?
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் கொடுமையை அனுபவித்தவர்கள் மீண்டும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க முன்வருவார்களா?
முன் வர மாட்டார்கள். பா.ஜ.க.வை ஆட்சி அதி காரத்தை விட்டு விரட்டி அடித்திடவே 2024 மக்களவைத் தேர்தலில் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
தமிழில்: வீ.குமரேசன்
நிறைவு