திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது ஆண்டு பிறந்தநாள் – சமூக நீதி நாள் வாழ்த்து மற்றும் திராவிட மாணவர் கழகத்தில் சேர வேண்டும் ஏன்? துண்டறிக்கைகளை 14.9.2023 அன்று திருச்சி பெரியார் கலைக்கல்லூரி மற்றும் அரசு சட்டக் கல்லூரி வாயில் முன் பல்கலைக்கழக திராவிட மாணவர் கழக அமைப்பாளர் ஆ.அறிவுச்சுடர், குமரேசன், மதன், சேகுவாரா ஆகியோர் வழங்கினார்கள். திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் துண்டறிக்கையை நன்கொடையாக வழங்கினார்.