சென்னை, செப். 16- சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நாடாளு மன்ற மக்களவை மற்றும் மாநி லங்களவை திமுக உறுப்பினர் களின் கூட்டம் இன்று (16.9.2023) காலை தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் நடைபெற்றது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக நாடா ளுமன்ற உறுப்பினர்கள் கூட் டத்தில் கலந்துகொண்டனர்.
அக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,
தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக “இந்தியா” கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் குரல் எழுப்புவோம்.
அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த நாளில் – தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டில், வர லாற்றில் பொன் எழுத்துக்க ளால் பொறிக்கத்தக்க “கலை ஞர் மகளிர் உரிமை திட்டத்தை” துவக்கி வைத்து – ஒரு கோடிக் கும் மேற்பட்ட மகளிரின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய – தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான தளபதி அவர் களுக்கு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நன் றியை – பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.
காவிரி நதிநீர் பிரச்சினையில் நடுவர் மன்றமும், உச்சநீதி மன்றமும் அளித்துள்ள தீர்ப்பு களை பொருட்படுத்தாமல், மழை குறைபாட்டைக் கார ணம் காட்டி, தமிழ்நாட்டின் பங்கான நீரை கருநாடக மாநி லம் விடுவிக்காததால் குறு வைப் பயிர் பாதிக்கப்பட்டுள்ள தோடு, சம்பா பயிரும் கேள் விக்குறியாகி உள்ளது. எனவே மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நீரை உடன டியாக விடுவிக்குமாறு கரு நாடக அரசுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்திட வேண்டும் எனக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
ஒன்றியத்தில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டிற்கான திட்டங் களுக்கு முக்கியத்துவம் அளிப் பதில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை முடக்கி வைத்திருப்பது போல் – இரண் டா வது கட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிக்கான நிதிஒதுக்கீட்டையும் செய்ய வில்லை. முதலமைச்சர் அவர் கள் பிரதமரின் முதல் சந்திப்பி லேயே வலியுறுத்தியும், இன்று வரை ஒன்றிய அரசின் அமைச் சரவைக் கூட்டத்தில் வைக்கா மல் இழுத்தடித்து, தமிழ்நாட்டு உட்கட்டமைப்புத் திட்டங்க ளுக்கு ஒன்றிய அரசு தடைக் கல்லை ஏற்படுத்தி வருகிறது.
பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால், தமிழ்நாட்டில் தற் கொலைகள் அதிகரித்து வரு கிறது. தமிழ்நாடு சட்டமன்றமே நீட் தேர்விலிருந்து தமிழ்நாட் டிற்கு விலக்கு அளிக்க மசோ தாவை இரண்டு முறை ஒரு மனதாக நிறைவேற்றி, குடிய ரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த பிறகும் – ஒன்றிய அரசு அந்த மசோதாவிற்கு இன்னும் ஒப்புதல் அளிக்காமலேயே இருப்பது பாஜக ஆட்சி தமிழ் நாட்டிற்கு செய்து வரும் மாபெரும் துரோகம். நீட் தேர்வு மசோதாவிற்கு உடன டியாக ஒப்புதலை அளித்திட தொடர்ந்து நாடாளுமன்றத் தில் திமுக குரல் எழுப்பும்.
பெண்ணுரிமை வழங்குவ தில் தலைசிறந்த மாநிலமாக மட்டுமின்றி, – “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை” பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று செயல்படுத்தியுள்ள சூழலில், நாடாளுமன்றம் மற் றும் சட்டமன்றங்களில் மகளி ருக்கு 33 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதா பற்றி வாயே திறக்காமல் காலத்தை கழித்துள்ளது ஒன் றிய பா.ஜ.க. அரசு. முத்தமிழ றிஞர் கலைஞர் அவர்களும், இன்று அவர் வழியில் செயல் படும் மாண்புமிகு முதலமைச் சர் அவர்களும் மகளிர் மசோ தாவை நிறைவேற்றக் கோரி எண்ணற்ற முறை கோரிக்கை கள் வைத்தும் அதன் மீதான விவாதத்திற்கு கூட பா.ஜ.க. அரசு தயாராக இல்லை. எனவே இந்த சிறப்பு கூட் டத்தில் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோ தாவை நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் எழுப்ப இக் கூட்டம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவிற்கே முன்னோ டியாக சமூகநீதிக்கான குரல் எழுப்பும் நமது இயக்கம், இச்சிறப்பு கூட்டத்தொடரில், “மண்டல் கமிஷன் பரிந்துரைப் படி ஒன்றிய அரசின் துறைக ளில் முழு ஒதுக்கீட்டை செயல் படுத்த வேண்டும்”, “அரசுத் துறைகளில் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண் டும்”, “தனியார் வேலைவாய்ப் புகளிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும்”, “பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள க்ரீமிலேயரை 25 லட்சமாக உயர்த்த வேண்டும்”, “உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளோடு “இடஒதுக்கீட்டிற்கு உள்ள 50 விழுக்காடு உச்சவரம்பு நீக்கப் படும்” மசோதாவையும் இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட் டத்திலேயே கொண்டு வந்து நிறைவேற்ற வலியுறுத்துவோம்.
ஒன்றிய பா.ஜ.க. அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட “விஸ்வகர்மா யோஜானா” திட்டம், குலத் தொழிலை ஊக்குவிக்கும் வகையிலான நடைமுறைகளை வகுத்து, அதிலும் குறிப்பாக 18 வயது நிறைந்துள்ளவர்களை கல்லூரிக்கு செல்ல விடாமல், பரம்பரை தொழிலையே செய் யத் தூண்டும் குலத் தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி. இத்திட் டத்தையும் எதிர்த்து நாடா ளுமன்றத்தில் கழக உறுப்பி னர்கள் குரலெழுப்புவார்கள்.
எங்கள் ஆட்சி காலத்தில் நாட்டையே மாற்றுவோம் என பேசி வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசு, தற்போது “இந்தியா” கூட்டணிக்கு அஞ்சி “பாரத்” என்று நாட்டின் பெயர் மாற்று வதிலேயே உன்னிப்பாக இருக் கிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் – முற்றிலும் தோல்வியுற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசை, நாடாளுமன்றத்தில் “இந்தியா” கூட்டணி கட்சிக ளுடன் ஒருங்கிணைந்து எதிர் கொண்டு இந்திய ஜனநாய கத்தை காத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.