மனிதனுக்கு மனிதன் உதவி செய்ய வேண்டும்; பிறரிடத்தில் அன்பு காட்ட வேண்டும்; பிறருக்குக் கெட்டவனாகக் கூடாது; பிறரை மோசம் செய்யக் கூடாது. இவை போன்ற பண்புகள் இன்று மக்களிடத் தில் அறவே இல்லாமல் போனது ஏன்? எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும், பெரிய பதவிகளைத் தேட வேண்டும், பெரிய மனிதன் ஆக வேண்டும், பேரும் புகழும் அடைய வேண்டும் என்றே எல்லோ ரும் நினைக்கிறார்கள். ஒழுக்கத்துக்கும், நாணயத்திற் கும் மதிப்பளித்து சிறிதேனும் இடம் கொடுக்கிறார்களா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’