வருந்துகிறோம் மேனாள் அமைச்சர் இந்திர குமாரி மறைவு

1 Min Read

மேனாள் அமைச்சர் புலவர் இந்திர குமாரி (வயது 74) சிறுநீரக பாதிப்பின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று (15.4.2024) மாலை அவர் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

இந்திரகுமாரி அ.தி.மு.க. சார்பில் நாட்ராம்பள்ளி தொகுதியில் இருந்து 1991ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப் பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மறைந்த முதல மைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக 1991 முதல் 1996 வரை பொறுப்பு வகித்தார். தொட்டில் குழந்தை திட்டம் உருவாக காரணமாக விளங்கினார்.இவர் 2006இல் தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு தி.மு.க.வில் இலக்கிய அணி மாநிலத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. இவரது கணவர் பாபு வழக்குரைஞர் ஆவார். இவர்களுக்கு லேகா சந்திர சேகர் என்ற மகள் உள்ளார். இந்திரகுமாரியின் உடல் இறுதிமரியாதை செலுத்துவதற்காக அடையாறு காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. தி.மு.க. நிர்வாகிகள் பலரும் அவருக்கு மரியாதை செலுத் தினர். இறுதி நிகழ்வு இன்று (16.4.2024) பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெற்றது. இந்திரகுமாரி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *