காணொலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஈரோடு, செப். 16- தி.மு.க. தலை வர், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.9.2023) அறி ஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், ஈரோடு மாநகரத்திற்குட்பட்ட வீரப்பன்சத்திரத்தில் புதுப்பிக்கப்பட்ட அறி ஞர் அண்ணா சிலையை, முகாம் அலுவலகத்திலி ருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டத் திற்குட்பட்ட வீரப்பன் சத்திரம் பேரூராட்சியாக இருந்தபோது பேரூ ராட்சி அலுவலகத்தில் அறிஞர் அண்ணா சிலை தந்தை பெரியார் தலை மையில் முத்தமிழறிஞர் கலைஞரால் 26.10.1969 அன்று திறந்து வைக்கப் பட்டது. தற்போது வீரப் பன்சத்திரம் பேரூராட்சி, ஈரோடு மாநகரத்தோடு இணைக்கப்பட்டு மாநக ரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அங்கே அமைக் கப்பட்டிருந்த அறிஞர் அண்ணா அவர்களின் சிலை மற்றும் கட்டுமா னம் பழுதடைந்த நிலை யில் இருந்ததால், தற்போது அறிஞர் அண்ணா அவர் களின் சிலை மற்றும் அச்சிலை அமைந்த இடம் புதுபிக்கப்பட்டது. அறிஞர் அண்ணாவின் 115ஆவது பிறந்த நாளான நேற்று (15.09.2023) தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத் தார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், வீட்டுவசதி மற்றும் நகர்ப் புர வளர்ச்சித் துறை அமைச்சருமான சு.முத்து சாமி, தி.மு.கழக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பி னருமான அந்தியூர் ப. செல்வராஜ், ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் என். நல்ல சிவம், சட்டமன்ற உறுப் பினர் ஏ.ஜி. வெங்கடாச லம், ஈரோடு மாநகராட்சி மேயர் எஸ். நாகரத்தினம், துணை மேயர் வே. செல்வராஜ், மாநகராட்சி மண்டல குழு தலைவர் கள், மாமன்ற உறுப்பி னர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க. நிர் வாகிகள் கலந்து கொண் டனர்.