பெரியாரியம் பேசிய தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நினைவு நாள் – இன்று (15-4-1995)

2 Min Read

“தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்திற்குள் அனுமதிப்பது, சமஸ்கிருத வேத மந்திரங்களுக்கு பதில் தமிழில் வழிபாடு செய்வது, கோயில்களில் அர்ச்சகர்கள் பின் பற்றிய ஜாதிய கட்டுப்பாடுகளை நீக்கி அனைத்து சமூகத் தவரையும் அர்ச்சகராக்க முயன்றது உள்ளிட்ட செயல் களுக்காக குன்றக்குடி அடிகளார் இன்றும் நினைவு கூரப்படுகிறார்.”
பெரியாரின் கடவுள் மறுப்பு கருத்துகளோடு முரண் பாடுகள் கொண்டாலும் ஜாதி ஒழிப்பு பணிகளில் பெரியார் உடன் இணைந்து பணியாற்றிய ஆன்மிகப் பெரியவர்களில் முக்கியமானவராக குன்றக்குடி அடி களார் உள்ளார்.

தமிழில் அர்ச்சனை செய்வதை தொடங்கி வைத்தவர்
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடக்கப்பட்ட தமிழ் நாடு தெய்வீகப் பேரவையின் தலைவராக இருந்த அடிகளார் கோயில்களில் தமிழில் அர்ச்சனையை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1961ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தவச்சலம் முன்னிலையில் திருமறை தமிழ் அர்ச்சனையை தொடங்கி வைத்தார்.

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற அடிகளார் மீதான வழக்கை அண்ணா அவர்கள் முதலமைச்சரான நிலையில் விலக்கிக் கொண்டார்.
திருநீறு அணிந்தபடியே பெரியாரின் பகுத்தறிவு கூட்டங்களிலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயத்தினர் நடத்திய நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட குன்றக்குடி அடிகளார் 1969ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கலைஞர் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு சட்டமன்றத் தின் மேலவை உறுப்பினர் ஆனார்.

அனைத்துக் ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வழிவகை செய்யும் மசோதாவை கலைஞர் தலைமையிலான தமிழ் நாடு அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்தபோது காஞ்சி காமகோடி பீடம் தரப்பில் இருந்து அந்த மசோதாவை எதிர்க்க கோரிக்கை வந்த போதிலும் அதற்கு இசைவு தெரிவிக்காமல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
மண்டைக்காடு கலவரத்தில் அமைதியை ஏற்படுத்தியவர்

1982ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மண் டைக்காட்டில் நடந்த மதக்கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதி திரும்பும் நடவடிக்கைகளில் அடிகளார் ஈடுபட்டார்.
1965 அக்டோபர் 31 அன்று ‘விடுதலை’ பணி மனையை (சென்னை பெரியார் திடலில்) திறந்து வைத்து “தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் ‘விடுதலை'” என்று கூறியவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆவார்.

“இன்றைய ஆஸ்திகம் என்பது சிறுபான்மையினர் நலம்; இன்றைய நாத்திகம் என்பது பெரும்பான்மையினர் நலம்” என்று 1971 தேர்தலின்போது கூறிய கருத்தாளர் – அருளாளர் நமது அடிகளார் ஆவார்.

மறைவு

ஆன்மிகப் பணி என்பது ஆண்டவனுக்கு செய்யும் பணி மட்டும் அல்ல – அது மானுட மேன்மையை நோக்கி இருக்க வேண்டும் என்ற நோக்குடன் வாழ்ந்த அடிகளார் 1995ஆம் ஆண்டு இதே ஏப்ரல் 15ஆம் தேதி மறைந்தார்.
அவரின் நினைவைப் போற்றுவோம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *