சந்திராயன் மூன்று விண்கலம் நிலவில் தரை இறக்கத்தை கண்டு களித்த 80 லட்சம் பேர் – காட்சிப்பதிவு வெளியீடு

1 Min Read

அரசியல்

பெங்களுரு, செப். 16- சந்திர யான் 3 விண்க லன் நில வில் தரையிறங்கியதை 80 லட்சம் பேர் யூடியூபில் நேரலையாக பார்த்தனர். 

உலக சாதனை படைத்த இந்த யூடியூப் லைவ் ஸ்ட்ரீமிங் பல நாடுகளை ஆச்சர்யப்பட வைத்தது. இந்நிலையில், இஸ்ரோவின் இந்த சாதனைக்காக யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நியால் மோகன் பாராட்டு தெரிவித்துள்ளார். யூடியூபில் 80 லட்சம்பேர் நேரலை யில் இருப்பதை பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. இஸ்ரோவில் உள்ள அனைவருக்கும் பாராட் டுக்கள். 80 லட்சம் பேர் நேரலையில் பார்த்துக் கொண்டிருப்பது அற்புத மானது என்று கூறியுள் ளார். முன்னதாக இது தொடர்பான சிறிய காட் சிப் பதிவு ஒன்றை யூடியூப் இந்தியா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இதனை ரீ போஸ்ட் செய்து நியால் மோகன் பாராட்டு தெரிவித்துள் ளார். 

சந்திரயான் 3 விண் கலம் நிலவில் தரையிறங் குவது கடந்த மாதம் 23 ஆம் தேதி இஸ்ரோவின் யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது. உலக அளவில் நேரலை யாக அதிகம் பேர் பார்த்த நிகழ்வு என்ற சாதனையை இது ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி யூடியூப் இந்தியா வெளியிட்டுள்ள 16 வினாடி காட்சிப்பதிவில் இஸ்ரோவின் மத்திய கட்டுப்பாட்டு அறை, அன்றைக்கு நடந்த பர பரப்பான காட்சிகள், திட்டம் வெற்றி பெற்ற தும் விஞ்ஞானிகள் கொண் டாடியது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்று உள்ளன. கடந்த மாதம் வெற்றிகரமாக தரையிறங்கியதை தொடர்ந்து தற்போது சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நில வின் தென் துருவ பகுதி யில் உள்ளது. நிலவின் தென் துருவத்தில் விண் கலனை தரையிறக்கிய முதல் நாடு என்ற சாத னையையும் இந்தியா ஏற்படுத்தியுள்ளது. அமெ ரிக்கா, சீனா, ரஷ்யாவை தொடர்ந்து நிலவில் விண்கலனை தரையிறக் கிய 4 ஆவது நாடு என்ற பெயரை இந்தியா பெற் றுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *