கிருட்டினகிரி, ஏப். 15- கிருட்டினகிரி மாவட்டக் கழக மேனாள் தலைவர் காவேரிப்பட்டணம் ஓவியர் தா.திருப்பதியின் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கிருட்டினகிரி மாவட்டக் கழகம் சார்பில் பெரியார் மய்யத் தில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் கோ. திராவிடமணி தலைமை வகித்து சுயமரியாதைச் சுடரொளி காவேரிப்பட்டணம் தா.திருப்பதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கா.மாணிக்கம், மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், கிருட்டினகிரி நகரத் தலைவர் கோ.தங்கராசன், செயலாளர் அ.கோ.இராசா, ஒன்றியத்தலைவர் த.மாது, செயலாளர் கி.வேலன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வே.புகழேந்தி, காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், செயலாளர் பெ. செல்வேந்திரன், பையூர் பரத், ப.க. நாகராஜ், செ.கலையரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.