மோடி தலைமையிலான பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அரசின்
10 ஆண்டு ஆட்சியின் நிறைவேறாத ‘கியாரண்டீ’கள்
வாக்காளப் பெருமக்களே! விழித்துக்கொண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்
நேற்றைய (14.4.2024) தொடர்ச்சி…
துரோகம் – 6
மிகப்பெரிய ஊழல்!
நம் கற்பனைக்கே எட்டாத – திட்டமிட்டு நடந்துள்ள ஒரு மாஃபியா குற்றம்!
அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்ன?
1) ஊழலை ஒழிப்போம்.
2) கருப்புப் பணம் முழுவதையும் வெளியே கொண்டு வருவோம்
3) இந்தியச் செல்வந்தர்கள் சுவிஸ் வங்கிகளில் மறைத்து வைத்துள்ள, கணக்கில் வராத, முறைகேடாகச் சேர்க்கப்பட்ட கருப்புப் பணத்தையெல்லாம் மீட்டுக் கொண்டு வருவோம்.
4) ஒவ்வொரு நபரின் வங்கிக் கணக்கிலும் நேரிடை யாக ரூபாய் 15 லட்சம் செலுத்துவோம். பறிமுதல் செய்யப் பட்ட கருப்புப்பணத் தொகைகளிலிருந்து இது வழங்கப்படும்.
அதன் பின் நடந்தது என்ன?
1) பா.ஜ.க. ஆட்சி நிலவிய அத்தனை மாநிலங்களிலும் ஊழல் எல்லை மீறிப் போனது. பா.ஜ.க. ஆட்சி நடந்த கருநாடகாவில் “40 சதவிகித அரசு” என்று எல்லோரும் கேலி செய்ததை நாம் பார்த்தோம். எதற்கெடுத்தாலும் 40 சதவிகித கையூட்டு பெற்ற அரசு என்று இதற்குப் பொருள். ஒப்பந்ததாரர்களின் கூட்டமைப்பே நேரடியாகக் குற்றம் சாட்டியது. “என் மரணத்திற்கு பா.ஜ.க. அரசே காரணம்!” என்று எழுதிவைத்து விட்டு ஒரு காண்ட்ராக்டர் பா.ஜ.க. அரசின் அராஜகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தற்கொலையே செய்துகொண்டார்.
2) வங்கியில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத கொள் ளைக்காரர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி, மெஹுல் சோக்ஸி உட்பட 46 மோசடிப் பேர்வழிகள் பொதுமக்களின் சொத்தை கபளீகரம் செய்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார்கள். ஒரு பெரும் பணக்காரத் திருடன் கூட சட்டத்தால் தண்டிக்கப்படவேயில்லை. ஒரு நபரைக்கூட கைது செய்து இழுத்து வர இந்த பாஜக அரசு முயலவேயில்லை.
3) சுவிஸ் வங்கிக் கணக்குகளில் உள்ள கருப்புப் பணம் பறிமுதல் செய்யப்படாததைவிட பெரிய கொடுமை — ஸ்டேட் பாங்கின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அந்தத் திருடர்களின் பெயர்கள் வெளிவந்துவிடாதபடி சதி செய்த பா.ஜ.க. அரசின் அதிகார அத்துமீறல்தான் அது.
4) பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாடு முழுவதும் மக்களை சொல்லொண்ணாத் துயருக்கு ஆளாக்கியது பாஜக அரசு. சிறு, சில்லரைத் தொழில் வியாபாரிகள் வீதிக்கே வரும் அவல நிலை ஏற்பட்டது. வாக்களித்தபடி, கருப்புப் பணத்தில் ஒரு ரூபாய் கூட இந்த அரசு பறிமுதல் செய்து கொண்டு வரவில்லை. பணமதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி வாசல்களில் கால் கடுக்க நின்ற மூத்த குடிமக் களுள் 170 பேர் மயங்கி விழுந்து மாண்டனர். எதையும் பொருட்படுத்தாமல் இந்த பாஜக அரசு அலட்சியப்படுத்தி யதை மன்னிக்க முடியுமா?
5) ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட எந்த கார்ப்பரேட் (குழும நிறுவன) அதிபர்கள் மீதும், பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்கவேயில்லை.
6) உயர்மட்ட அளவில் திட்டமிடப்பட்டு பல ஊழல் கள் நடந்திருப்பது தெளிவாகிறது. பட்டியல் நீளக்கூடும். எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை — தேர்தல் பத்திர நன்கொடை விவகாரம் ஆகும். ஊழல் வாயிலாக குவிந்த பணத்தின் பெரும் பகுதியை பாஜக நன்கொடை என்ற போர்வையில் அபகரித்துக் கொண்டுள்ளது. 33 நிறுவனங் களிலிருந்து 1751 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு 3.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அரசாங்க காண்ட்ராக்ட்களை அவற்றுக்கு பா.ஜ.க. அரசு வழங்கியுள்ளது. பதிலுக்கு அந்த நிறுவனங்கள் 551 கோடி ரூபாயை ‘கமிஷனாக’ தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க.வுக்கு அளித்துள்ளன. நன் கொடை வழங்காத நிறுவனங்கள் மீது பழிவாங்கும் நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சி.பி.அய். மற்றும் அமலாக்கத் துறை நடவடிக்கைகளால் அவை அச்சுறுத்தப்பட்டன. 2471 கோடி ரூபாய் பத்திரங்கள் மூலம் ‘பலவந்தமாக’ பெற்றுக் கொண்ட பிறகே அந்த நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
7) கோவிட்-19 காலத்தில் கரோனா தடுப்பூசிகளுக் கும், மாத்திரை களுக்கும் பா.ஜ.க. அரசு பல நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து, அதற்கு ‘கமிஷனாக’ தேர்தல் பத்திரங்கள் மூலம் பல நூறு கோடி ரூபாய் வசூலித்துவிட்டது.
8) மாட்டிறைச்சி ஏற்றுமதி மூலம் பல நிறுவனங்களிலி ருந்து பா.ஜ.க. அரசு ‘கமிஷனாக’ நன்கொடையினைப் பெற்றுள்ளது.
9) “பி.எம். கேர்ஸ்” என்ற திட்டத்தின் வாயிலாகவும் மிகப்பெரிய ஊழலே நடந்துள்ளது.
10) தேர்தல் பத்திரங்கள் பற்றியோ ‘பி.எம்.கேர்ஸ்’ திட்ட நிதி வசூல் பற்றியோ விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று பா.ஜ.க. அரசு முரண்டு பிடித்ததை நாடே அறியும். உச்சநீதி மன்றத்தின் நடவடிக்கையால் பா.ஜ.க. அரசின் ஊழல்கள் பல வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இவற்றையெல்லாம் மறக்கச் செய்து மக்களை திசை திருப்ப மோடி அரசு டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது.
இவற்றுக்கெல்லாம் காரணங்கள் என்ன?
1) ‘ஊழலற்ற இந்தியா’ என்ற முழக்கமெல்லாம் வெளி வேடமே. காங்கிரசுக்கு எதிராக மக்களைத் திருப்பும் சதி. முழுக்க முழுக்க அரசியல் நாடகம்!
2) பா.ஜ.க. ஆட்சியில் கருநாடக முதலமைச்சர்களாக இருந்தவர்கள், எடியூரப்பா உள்பட அனைவருமே மெகா ஊழல் பேர்வழிகள்தான்.
3) மோடி ஒரு பாவமும் அறியாத, எல்லாம் துறந்த முனிவர் போல் நாடகமாடுகிறார். அவருடைய தலைமையிலான பா.ஜ.க. அரசின் தகிடுத்தத்தங்களும் முறைகேடான செயல்களும் தொடர்ந்தபடியேதான் உள்ளன.
4) பொதுச்சொத்துகள் பெருமளவுக்கு தனியார் நிறுவனங் களுக்கு கைமாறியுள்ளன. அதற்கு ஈடாக அரசின் கருவூலத் திற்கு வந்த தொகையோ மிகவும் சொற்பமானது. ஆனால் கையூட்டாக பா.ஜ.க. அரசு பெற்ற ‘கமிஷன்’ தொகையோ மிகவும் அதிகம். சுருக்கமாகச் சொன்னால் – பா.ஜ.க. அரசு நாட்டையே சிறுசிறு துண்டுகளாகக் கூறுபோட்டு விற்றுக் கொண்டு வருகிறது.
5) பா.ஜ.க. அரசு அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஅய் போன்ற அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன் படுத்தி ஊழல் சேற்றில் ஆழமாக மூழ்கியுள்ளது. பா.ஜ.க. அரசு ஊழல்கள் மூலமாக குவித்துள்ள பணம் தேர்தல் பத்திரம் மற்றும் ‘பி.எம்.கேர்ஸ்’ எனும் கருவூலங்களில் தஞ்சமடைந்துள்ளது.
6) அதானி குழுமம் மோடிக்குச் சொந்தமானதுதான் என்ற அதிர்ச்சித் தகவலும் தற்போது பரவத் தொடங்கியுள்ளது.
7) பா.ஜ.க.வே ஒரு மாஃபியா கூட்டம் போல்தான் செய லாற்றிக் கொண்டிருக்கிறது. உச்சி முதல் பாதம் வரை ஊழல் சேற்றால் கறைபட்டுள்ள பா.ஜ.க. அரசு பல குற்றவாளிகளின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு இயங்கி வருகிறது. அவர் களுக்கும் பயம் இல்லை, மோடி அரசுக்கும் பயம் இல்லை. இந்த அவலநிலை மாற வாக்காளர்கள் எல்லா மாநிலங்களிலும் விழித்தெழ வேண்டும்.
துரோகம் – 7
சமூகநீதியை நிலைநாட்டிடும்
இடஒதுக்கீடுகள் புதைகுழியில்!
ஒடுக்கப்பட்ட மக்களின் உணவில் நஞ்சுக் கலப்பு:
அரசு அளித்த வாக்குறுதிகள் என்ன?
1) சமூகநீதியை நிலைநாட்டுவோம்.
2) விளிம்புநிலை மக்களுக்கே முன்னுரிமை அளிப்போம்.
3) உள் இடஒதுக்கீடுகளை நடைமுறைப்படுத்துவோம்.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
1) இட ஒதுக்கீட்டுக்கெதிராக பெருமளவு எதிர்ப்புகள்.
2) பல்வேறு சமூகத்தினரிடமிருந்து உள் ஒதுக்கீடு கோரிக்கைகள்.
3) ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பாக, நீதியை நிலை நாட்டுவோம் என்ற பொய்யான வாக்குறுதி.
4) இட ஒதுக்கீடு கேட்டு போராடிவரும் எந்தச் சமூகத் தினரும் பொருட்படுத்தப்படவேயில்லை.
5) அரசமைப்புச் சட்டப்பிரிவு 341/3 நீண்ட காலமாக திருத்தப்படாமல் இருப்பதால் உள் ஒதுக்கீட்டுப் பிரச்சினை தீர்வு காணப்படாத நிலையில் உள்ளது. இந்த விவகாரம் இதுவரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவும் இல்லை. இந்த நிலையில் அது எப்படி நடைமுறைக்கு வரமுடியும்? நாடாளுமன்றம் வரை இந்த விவகாரம் போனபிறகும் கிணற்றில் போடப்பட்ட கல்லாகக் கிடக்கிறது உள் ஒதுக்கீடு கோரிக்கை.
6) அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சார்ந்த மற்றும் சூத்திரர் பிரிவு மக்களுக்கும், இடஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றால் 50 சத விகித இடஒதுக்கீட்டு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும். பா.ஜ.க. இதுவரை இதுகுறித்து வாயே திறக்கவில்லை. மோடி யும் மவுன குருவாகவேதான் உள்ளார்.
மேற்கண்டவற்றுக்குப் பதிலாக பாஜக எப்படி வஞ்சனை செய்துள்ளது என்று பார்ப்போமா?
1) அரசுப் பணிகள் பல காலியாக இருந்தும் அவை நிரப் பப்படாமல் உள்ளன. அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுவதால் இட ஒதுக்கீடுகள் புறக்கணிக்கப்பட்டு, நம் முயற்சிகள்யாவும் வீணாகின்றன. இடஒதுக்கீடு என்ற வார்த்தையே அர்த்தமற்றதாக்கி வருகிறது.
2) இடஒதுக்கீடு என்ற போர்வையில் பல்வேறு சமூகத் தினர் மத்தியில் பரஸ்பரம் மோதல்களை ஒன்றிய அரசு ஏற்படுத்தி விடுகிறது. மக்கள் ஒருவரோடு ஒருவர் தெருச் சண்டைக்கு இணையாக மோதிக்கொள்ளும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் தந்திரமாக மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். மொத்தத்தில் எந்தப் பிரிவினருக்கும் எதுவும் கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்டு எல்லோரும் உரிமை மறுக்கப்பட்டு நிற்பதே மிச்சம்!
3) விளிம்பு நிலை மக்களின் நலனுக்காகவே கருநாடக மாநிலம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. ஆனால் பாஜக அரசு அதை அங்கீகரிக்க மறுக்கிறது. புதிய கணக் கெடுப்புக்கு மோடி அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஜாதி கணக்கெடுப்பு இடஒதுக்கீட்டு கொள்கை வெற்றிபெற மிகவும் அவசியம். ஆனால் அறிவியல் ரீதியான இந்த அணுகுமுறை பாஜக அரசுக்கு ஏற்புடையதாக இல்லை. இது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதை யாரால் மறுக்க முடியும்?
4) ஒரு புதுவகையான இடஒதுக்கீட்டை பார்ப்பனர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே, தானாக முன்வந்து வழங்கி யுள்ளது பா.ஜ.க. நாட்டின் மக்கள்தொகையில் மூன்றே சதவிகிதத்தினராக உள்ள பார்ப்பனர்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி யுள்ளது மோடி அரசு. இதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை. எவரும் கலந்தாலோசிக்கப்படவில்லை. எந்தவொரு ஆய்வும் நடத்தப்படவில்லை. இடஒதுக்கீடு உத்தரவிடப்பட்டு நேரி டையாக நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது. 50 சதவிகித அதிகப்பட்ச இடஒதுக்கீட்டு உச்சவரம்பு இந்தப் புதிய இடஒதுக்கீட்டிற்கு தடையாக இல்லாமல் போனது வியப்புக் குரியது. பல சமூகத்தினரும், வகுப்பினரும் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வரும்போது, இந்த உயர்ஜாதி இனத்திற்கு மட்டும் இட ஒதுக்கீடு கேட்காமலேயே கிடைத்துள்ளது வினோதமாக உள்ளது. அவர்களுக்கெல்லாம் மூடிக்கிடந்த கதவு இவர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. அரசியல் களத்தில், இடஒதுக்கீடு பா.ஜ.க. ஆட்சியில் மாபெரும் யுத்தமாகவே மாறியுள்ளது.
இந்த அவலநிலைக்கு உண்மையான காரணங்கள் என்ன?
1) ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது அரசியல் திரைக்குப் பின்னால் உள்ளது. திரைக்கு முன்னால் ஒரு நிறுவனம் போல் பா.ஜ.க.வை அது நிறுத்தியிருக்கிறது.
2) அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். ஒரு பார்ப்பனர் அமைப்பே.
3) இடஒதுக்கீட்டை ஆரம்பத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். எதிர்த்து வந்துள்ளது.
4) மண்டல் ஆணையம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை அங்கீகரித்து அறிக்கை அளித்தபோதும், ஏபிவிபி (கிஙிக்ஷிறி), விஸ்வ இந்து பரிஷத் (க்ஷிபிறி) போன்ற அமைப்புகள் அதைக் கடுமையாக எதிர்த்ததை நாம் மறந்துவிடக்கூடாது.
5) கருநாடக மாநிலத்தின் விளிம்புநிலை வகுப்பினராக மாடிகா, லம்பானி, போஜி சமுதாயத்தினர் வாழ்கின்றனர். இவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்போவதாக பா.ஜ.க. பொய்யான வாக்குறுதி அளித்தது. கருநாடக மாநிலவாழ் பழங் குடியினருக்கும், இடஒதுக்கீடு வழங்கப்போவதாக உறுதி யளித்தது. ஆனால் எல்லாமே பா.ஜ.க.வின் மொழியில் “ஜூம்லா” தான். மக்களை ஏமாற்றி அவர்களுடைய வாக்கு களைப் பறிக்க பாஜக அரசு நடத்திய நாடகம் அது. எல்லா வாக்குறுதிகளும் காற்றோடு போய்விட்டன.
6) பா.ஜ.க.வானது ஜாதி அமைப்பு முறை நீடிக்கவேண்டும் என்ற அடிப்படையில் உருவான ஒரு கட்சிதான். எனவே இட ஒதுக்கீட்டை அது எதிர்ப்பதில் வியப்பில்லை. ஜாதிப் பாகுபாடுகளை ஆதரிக்கும் மதவாத கட்சி இட ஒதுக்கீட்டை எப்படி ஆதரிக்கும்? சமூகத்தின் உண்மையான நிலை அதன் கண்ணுக்குத் தெரியாது. சமத்துவம் பற்றியோ, சமூக நீதி பற்றியோ துளியும் அக்கறை இல்லாத ஒரு கட்சி பா.ஜ.க. மக்கள் விரோத அரசு மோடி தலைமையில் உள்ள ஒன்றிய அரசு.
7) மேற்கண்ட காரணங்களையெல்லாம் உன்னிப்பாக கவனித்த பின்னும் பாஜக யாருக்கு சாதமாக, யார் பக்கம் உள்ள கட்சி என்பதை நாம் புரிந்துக் கொள்ளாவிட்டால் தவறு நம்முடையது. ஒடுக்கப்பட்ட மக்களும் விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களும் இனிமேலும் பாஜக அரசை நம்பிக் கொண்டிருந்தால் ஆடு கசாப்புக் கடைக்காரனை நம்பிய கதையாகத்தான் முடியப் போகிறது. எல்லா மாநிலத்து மக்களும் விழித்தெழுந்தால் மட்டுமே மோடியின் தலைமையிலான பாஜக அரசுக்கு, வரவிருக்கும் தேர்தலோடு முடிவு கட்டமுடியும்.
தமிழில்: எம்.ஆர்.மனோகர்