ஜனநாயகம் தான் மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறது!
அதைத் தக்க வைத்துக்கொள்ள நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு!
ஆசிரியர் கி. வீரமணி, நாடாளுமன்றத் தேர்தலின் முக்கியத்துவத்தை விளக்கி உரையாற்றினார்
ஜெயங்கொண்டம், ஏப் 14. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிதம்பரம், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிவரும் சுற்றுப்பயணத்தின் 12 ஆம் நாளில் சிதம்பரம், பெரம்பலூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் பேசினார். முதல் கூட்டத்தில் ஆண்டிமடம் கடைவீதியில் வி.சி.க. வேட்பாளர் எழுச்சித் தமிழர் திருமா வளவன் அவர்களை ஆதரித்து உரையாற்றி னார். இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் விடு தலை நீலமேகம் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடக்க உரையாக கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் உரையாற்றினார்.
சிதம்பரத்தில் தமிழர் தலைவர்!
இறுதியாக பேசிய ஆசிரியர், சிதம்பரம் நாடாளுமன்றத்தில் போட்டியிடுபவர் சிறந்த வேட்பாளர் என்று புகழ்ந்து, எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன். அவருக்கு பானை சின்னத்தில் வாக்களித்து இலட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுகோள் விடுத்து நிறைவு செய்தார். முன்னதாக நான்கு புத்தகங்களை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் அறிமுகம் செய்து வைக்க, கூட்டணிக் கட்சித் தோழர்கள் ஆசிரியரிடம் உரிய தொகை கொடுத்து பெற்றுக் கொண்டனர்.
பெரம்பலூரில் தமிழர் தலைவர்!
முதல் கூட்டம் முடிந்து, இரண்டாவது கூட்டம் இரண்டு மணி பயணத்தில் பெரம்பலூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தங்க ராசு தலைமை ஏற்க, மாவட்டச் செயலாளர் விஜயேந்திரன் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். ஆண்டிமடத்தில் பேசிவிட்டு முன்னதாக வந்திருந்த பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் தொடக்கவுரையாக பேசிக்கொண்டிருக்கும் போது இரவு 9 மணி அளவில் ஆசிரியர் வருகை தந்தார். பொதுச்செயலாளர் தனது உரையை நிறைவு செய்தார். ஒவ்வொரு கூட்டத்திலும் புத்தக அறிமுகம், விற்பனைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. காரணம் பா.ஜ.க. பற்றி பேசுவதற்கு மலையளவு தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், குறுகிய நேரத்தில் ஓரளவுக்குத்தான் சொல்ல முடியும். ஆகவே மக்கள் வாங்கிப் படிக்க வேண்டும். மற்றவர்களுக்கும் பரப்ப வேண்டும் என்றே எல்லா கூட்டங்களில் பேசி வருகிறார். அந்தப் பணிகள் இங்கும் தொடர்ந்தன.
மோடி ஆட்சியில் பாதிக்கப்படாதவர்கள் யார்?
இறுதியில் ஆசிரியர் பேசுகையில், இந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் காவி ஆட்சிக்கு முடிவு கட்டவில்லை என்றால் இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும். உலகத்தில் எந்த நாட்டிலும் பெண்களுக்கு ஓட்டுரிமம் கொடுப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு ஓட்டுரிமம் வாங்கி கொடுத்தது நீதிக்கட்சியாம் திராவிடர் இயக்கம்தான். அப்போது அமெரிக்கா, இங்கிலாந்திலும் கூட பெண் களுக்கு ஓட்டுரிமம் கிடையாது. ஓட்டுரிமை மட்டுமா? பாட்டி பள்ளிக்கூடத்திற்கு போக வில்லை, கல்லூரிக்கு போகவில்லை, மகள் களும், பேத்திகளும் இப்போது கல்லூரி களுக்கும், பல்கலைக்கழகத்திற்கும் சென்று இருக்கிறார்கள் என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிடர் இயக்கத்தின் சாதனைகள் ஆகும். தாய்மார்கள் எல்லோரும் இங்கு வந்து நிம்மதியாக உட்கார்ந்து இருக் கிறீர்கள் காலையில் பிள்ளைகளுக்கு காலை சிற்றுண்டி செய்ய வேண்டும் என்கிற கவலை இல்லை. ஏனென்றால் அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்த்துக் கொள்வார், இந்தியாவிலேயே இது நமது ஆட்சியில் தான்! இதை பார்த்துவிட்டு வெளிநாட்டுக்காரர்களும் பின்பற்றத் தொடங்கி விட்டார்கள் என்று திரா விடர் இயக்கம் 100 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு என்னென்ன செய்தது? என் பதை பட்டியலிட்டுக்காட்டினார். அது இன் றைய திராவிட மாடல் அரசு வரையிலுமே தொடர்வதை இணைத்துச் சொன்னார்.
பெண்கள் உரிமை என்று பிரதமர் பேசுகிறாரே தவிர நடப்பில் பெண்களுக்கு; பெண்களின் மாண்புக்கு மதிப்பு இருக்கிறதா? என்று கேள்வி கேட்டு, இல்லை என்பதற்கான ஆதாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக் கினார். பெண்களுக்கு மட்டுமா? மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பணியாளர்கள், சிறு குறு தொழிற்சாலையாளர்கள் என்று எல்லாரும் எப்படியெப்படி பாதிக்கப்பட் டுள்ளனர் என்பதை விவரித்தார். மேலும் அவர், “ஊழலை ஒழிக்க வந்தவர்கள் ஒழிப்பதற்குப் பதிலாக இமாலய ஊழலில் ஈடுபட்டுள்ளதை அம்பலப்படுத்தினார். மோடி கொடுத்த உத்தரவாதம் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்த உத்தரவாதங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன” என்று பல்வேறு தகவல்களை சுருக்கமாகக் கூறி, “பெண்கள் முடிவு செய்து விட்டால் மோடி ஆட்சி நிச்சயம் மாற்றப்படும். ஜனநாயகம் தான் மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுக் கிறது. அதைத் தக்க வைக்க இதுதான் கடைசி வாய்ப்பு. ஆகவே ஏப்ரல் 19 ஆம் தேதி, தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் அருண் நேரு அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்” என்று கேட்டு முடித்தார்.
முதல் கூட்டத்தில் முன்னிலை ஏற்றவர்கள்!
தி.மு.க. கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, தி.மு.க. வடக்கு ஒன்றியச் செயலாளர் முருகன், தி.மு.க. தெற்கு ஒன்றியச் செயலாளர் கலியபெருமாள், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சாமிநாதன், வி.சி.க. ஒன்றியச் செயலாளர் இராசாப்பிள்ளை, வி.சி.க. ஒன்றியச் செயலாளர் தேவேந்திரன், சி.பி.அய்.(எம்) ஒன்றியச் செயலாளர் பரமசிவம், சி.பி.அய். ஒன்றியச் செயலாளர் கவர்னர் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமைக்கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன், மாவட்டச் செயலாளர் மு.கோபால கிருஷ்ணன், காப்பாளர் மணிவண்ணன், கடலூர் மாவட்டத் தலைவர் தண்டபாணி, சிதம்பரம் மாவட்டத் தலைவர் பூ.சி.இளங் கோவன், மாவட்ட இணைச் செயலாளர் இராமச்சந்திரன், மாவட்டத் துணைச் செய லாளர் பொன்.செந்தில்குமார், ஆண்டிமடம் ஒன்றிய அமைப்பாளர் பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில், ஆண்டிமடம் நகரத் தலைவர் சுந்தரம், ஆண்டிமடம் நகரச் செயலாளர் அண்ணா மலை, சிதம்பரம் மாவட்ட இணைச் செய லாளர் யாழ் திலீபன் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர். இறுதியாக மாவட்ட இளைஞரணித் தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
இரண்டாம் கூட்டத்தில் முன்னிலை ஏற்றவர்கள்!
தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப் பினர் பிரபாகரன், காங்கிரஸ் கட்சித் தலைவர் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் ஞானசேகரன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் இரமேஷ், இந்திய தொழிலாளர் கட்சித் தலைவர் ஈஸ்வரன், ம.தி.மு.க. ஆலோசனைக்குழு உறுப்பினர் துரைராஜ், முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் சர்புதீன், வி.சி.க. மேற்கு மாவட்டச் செயலாளர் ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர்.
திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை. சந்திர சேகரன், வீ.அன்புராஜ், தலைமைக்கழக அமைப்பாளர் சிந்தனைச் செல்வன், நகரத் தலைவர் ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக மேனாள் செயலாளர் முகுந்தன், திராவிடர் கழக சட்டத்துறை செயலாளர் சித்தார்த்தன், பொதுக்குழு உறுப்பினர் அரங்கராசன், நகரச் செயலாளர் ஆதிசிவம், மாவட்ட அமைப் பாளர் பெ.துரைசாமி, நகர துணை செயலாளர் பெ.அண்ணாதுரை, பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் சி.பிச்சைப்பிள்ளை, பெரம்பலூர் ஒன்றிய தலைவர் பெ.பெரியசாமி, வேப்பந் தட்டை ஒன்றிய தலைவர் சி.இராசு, வேப்பந் தட்டை ஒன்றிய செயலாளர் இரா.சின்னசாமி, பகுத்தறிவாளர் கழக செயலாளர் மரு.ல காந்தி, ஆலத்தூர் ஒன்றிய தலைவர் வீ.ரவிக்குமார், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் அரங்க வேலாயுதம், நகர அமைப்பாளர் ஆ.துரை சாமி, வேப்பூர் ஒன்றிய செயலாளர் சி.அம்பி காபதி, நகர் மன்ற துணைத் தலைவர் ஹரி பாஸ்கர் (எ)ஆதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பி.அய்.(எம்.) ந.செல்லதுரை, பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மு.கந்த சாமி, கழக மாணவர் கழக அமைப்பாளர் க.குமரேசன், மாணவர் கழக தலைவர் பொ.பிறைசூடன், மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் சுகுமாரன், மாவட்ட இளைஞரணி தலைவர் செ.தமிழரசன் வேப்பூர் ஒன்றிய அமைப்பாளர் நா அரங்கய்யா ஒழிக தோழமைக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இறுதி யாக மாவட்ட இளைஞரணித் தலைவர் தமிழ ரசன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
இந்த தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக் குமார், இரா. குணசேகரன், பெரியார் வீர விளையாட்டு கழக மாநில தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம்,கழக துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டி, மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேசு, தலைமைக் கழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேசு, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சிறப்புப் பரப்புரைப் பாடல்
இந்தியா கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து கடந்த ஏப்ரல் 2 தென்காசி முதல் வரவிருக்கின்ற ஏப்ரல் 17 தஞ்சை வரையிலும் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்களின் தலைமையிலான பயணக்குழு தமிழ் நாடு தழுவிய அளவில் சூறாவளியாகப் பரப்புரை செய்து வருகிறது. அதற்காக சிறப்புப் பரப்புரைப் பாடல் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. இப்பாடலை பகுத்தறிவு எழுத் தாளர் மன்றப் பொதுச்செயலாளர் பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம் எழுதியிருக்கிறார். இசையமைத்துப் பாடியிருக்கிறார் திரைப்பட இசைய மைப்பாளர் விஜய் பிரபு. இப்பாடல் திராவிடர் கழகத் தலைவரின் பரப்புரைப் பயணத்திலும், பிற பரப்புரைகளிலும் சமூக ஊடகங் களிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பாடல் வரிகள்:
பல்லவி:
விடியட்டும் இந்தியாவின் காலம் வெல்லத் தான்!
முடியட்டும் மூடர் கூடக் காவி ஆட்சி தான்!
நறுக்கட்டும் நாக்பூர் நரியின் வாலை ஒட்டத்தான்!
நொறுங்கட்டும் அதிகார போதை கொட்டந்தான்!
பொல்லாத ஆட்சிக்கொரு முடிவும் இருக்குது!
செல்லாத பணமாக்கத்தான் தேர்தல் பிறக்குது!
திரள்வோமே ஒன்றாய் தீக்குன்றாய் கொடும் தீமை தீய்க்க!
மறவோமே என்றும் மதவாதப் பெருநோயை மாய்க்க!
வா… எழுந்து வா!
சரணம் 1:
பெரியாரின் கொள்கை இன்று ஓங்கி ஒலிக்குது!
திராவிட மாடல் கண்டே சங்கி நடுங்குது!
பரப்புரைசெய வந்தார் காண் தமிழர் தலைவர் தான்!
பரபரவெனச் சுழல்கின்றார் திக்கெல்லாம் நாளுந்தான்!
அழைக்கின்றார் வீரமணி அல்லலாட்சி நீக்கவே!
உழைக்கின்றார் ஓய்வின்றி மக்களாட்சி மீட்கவே!
வாருங்கள் சேருங்கள் போரைச் செய்வோம்
கொடுங்கோன்மை கூட்டத்தின் வேரைக் கொய்வோம்!
சரணம் 2
இந்தியா கூட்டணியின் வெற்றி முழங்குது!
எல்லார்க்கும் எல்லாமென்றே நீதி வழங்குது!
தமிழின மெழ தன்னைத்தான் தந்தாரே ஸ்டாலின்தான்
தடையுடைபடப் போர் செய்ய அஞ்சாரே ஸ்டாலின்தான்
வருங்காலம் நமக்காகும் ஸ்டாலின் வெற்றி கொள்ளத்தான்
வென்றே நாம் துணை நிற்போம் ராகுல் காந்தி பக்கம்தான்
வீழட்டும் மதவாதம் அடியோடு தான்!
வெல்லட்டும் குடியாவும் முடிசூடித்தான்!
வா… எழுந்து வா!