நேற்றைய (13.4.2024) தொடர்ச்சி…
துரோகம் – 5
இந்தியாவில் கார்ப்பரேட் கொள்ளை
(அதானி – மோடியின் முகமூடி)
‘எத்தெளு கருநாடகா’ (விழித்தெழு கருநாடகமே!)
வாக்குறுதிகள்?
♦ “நான் ஒரு யோகி, ரயில்வே நிலைய நடை மேடையில் டீ விற்றுக்கொண்டிருந்த எளியவன்”
♦ “ஒவ்வொருவருக்கும் மனநிறைவான வாழ்வை வழங்கிடுவதே எனது ஒரே குறிக்கோள்”.
♦ “சப் கா சாத்; சப் கா விகாஸ்” (அனைவரது துணை யுடன் அனைவரது வளர்ச்சி)
என்ன விளைந்தது?
♦ சாதாரண மக்களின் வாழ்வு சீரழிந்து வருகிறது; பெரிய முதலாளிகளின் வருமானம், சொத்து மற்றும் செல்வம் அதிகமாகி வருகிறது.
♦ நாட்டின் மூன்றில் ஒரு பங்கு செல்வவளமானது, மக்கள் தொகையில் 1 விழுக்காட்டினர் வசம் தங்கி உள்ளது.
♦ நாட்டின் பன்மடங்கு லட்சாதிபதிகளின் எண் ணிக்கை 56லிருந்து 169 ஆக உயர்ந்துள்ளது.
♦ மோடியின் நெருங்கிய கூட்டாளிகளான அதானி யும், அம்பானியும் நாட்டின் முதல் இரு பெரும் பணக்காரர் களாக இருக்கிறார்கள்.
♦ அதானியின் சொத்து மதிப்பு (2013 ஆம் ஆண்டில்) ரூ.25,792 கோடியாக இருந்தது. 2022இல் இது ரூ.7,48,000 கோடியாக அதிகரித்தது. அதாவது இந்த பத்தாண்டு காலத் தில் அதானியின் சொத்து மதிப்பு 30 மடங்காக உயர்ந்துள்ளது.
♦ 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.1,54,742 கோடியாக இருந்தது. 2022 – இல் சொத்து ரூ.7,54,620 கோடியாக உயர்ந்தது. அதாவது இந்தக் கால இடைவெளியில் அம்பானியின் சொத்து 5 மடங்காக உயர்ந்தது.
ஒரு சிலரின் அபரிமிதமான வளர்ச்சிக்கான காரணங்கள் என்ன?
♦ மோடி அரசானது பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களின் ஆதரவுடன் அமைக்கப்பட்டதாகும். மோடியை பிரதமமந்திரியாக்கிட அம்பானி அவர் மீது முதலீடு செய்து வாஜ்பாய், அத்வானி ஆகியோரை ஓரம் கட்டினார். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப் பிற்குமிடையிலான தரகு வேலையினை அதானி செய்தார்.
♦ குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக மோடி இருந்தபொழுது, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, கட்டுங்கடங்காத, வரன்முறை இல்லாத வகையில் செயல் படும் உரிமை நிலை கிடைத்தது. அதனால் அவைகள் மோடியை ஆதரித்தன. மோடியை பிரதம மந்திரியாக்கினால், பா.ஜ.க.விற்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும், ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தனர். அரசாங்கத்தின் மீது பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுப்பாட்டை விதித்திடவும், அதனடிப்படையில் நாட்டையும், நாட்டின் வளத்தையும் கட்டுப்படுத்திடவும் விரும்பின. அதைப் போலவே ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினர் அதிகார உச்சத்துடன் அரசாங்கத்தை அமைத்திட பெரு நிறுவனங்களின் உதவியை நாடினர். ஓர் உடன்பாடு உருவானது. இப்படியான சந்தர்ப்பவாத, தீங்கான உடன்பாட்டின் வெளிப்பாடுதான் மோடி தலைமையிலான அரசாங்கம் ஆகும்.
♦ ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன், ஒன்றிய அரசுக்கு உரிய, சொந்தமான பொதுச்சொத்துகள் முழுவதும் குறைந்த விலைக்கு தனியாருக்கு விற்கப்பட்டன. லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனங்களான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிட்., வடகிழக்கு மின்சக்தி கார்ப்பரேசன், டெஹ்ரி புனல் வளர்ச்சிக் கார்ப்பரேசன் லிட்,, காமராசர் துறைமுகம், ஏர் இந்தியா மற்றும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் ‘தனியார் மயமாக்கம்’ எனும் பொருளாதாரத் திட்டத்தால் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன. பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை முடக்கிப் போட அம்பானியின் ஜியோ கம்பெனிக்கு வழக்கத்தை மீறிய சலுகைகள் வழங்கப்பட்டன. விமான நிலையங்களும், ரயில்வே நிலையங்களும் ரயில்வே வழித்தடங்களும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. மாபெரும் செலவுடன் கட்டி எழுப்பப்பட்ட இந்த பொதுத் துறைகள்; ஒரு சிலர் கைவசம் ஒப்படைக்கப்படுகின்றன; பெயரளவில் தான் ஒரு விலைக்கு விற்கப்படுகிறது.
♦ தேசிய நெடுஞ்சாலைகளை அபிவிருத்தி செய்த தாக மோடி அரசு பெருமையடித்துக் கொள்கிறது. உண் மையில், 26,700 கி.மீ. நெடுஞ்சாலையை ரூ.8 லட்சம் கோடி அளவில் செய்து முடிக்கப்பட்ட சாலைகள் அதானிக்கும், அம்பானிக்கும் ரூ.1.6 லட்சம் கோடிக்கு அளிக்கப்பட்டுள்ளன.
மோடி தலைமையிலான ஒன்றிய அரசானது 400 ரயில்வே நிலையங்கள், 741 கி.மீ. தூர அளவில் செயல்பட்டு வரும் கொங்கன் ரயில்வே, 265 ரயில்வே சரக்கு நிலையங்கள், 90 பயணியர் ரயில்கள், 25 பெரிய விமான நிலையங்கள், என்.டி.பி.சி., என்.எச்.பி.சி,, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சொத்துகள், எரிவாயு குழாய் பாதை நிறுவனம், துறைமுகங்கள், எப்.சி.அய்-யின் 39 விழுக்காடு சேமிப்பு நிலையங்கள், 160 கல்குவாரிகள், சுரங்கங்கள், ஏ.எப்.சி. கேபிளின் 2.86 லட்சம் பெறுமான உடமைகள் – இவையனைத்தும் தனியார் வசம் / கார்ப்பரேட் நிறுவன வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. (இதற்கு பிரதி பலனாக அந்த நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன. நாட்டையே ஏலத்தில் விற்று உள்ளனர் என்பதைத் தவிர வேறெப்படிச் சொல்ல முடியும்?
♦ லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பிலுள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களை ஏழை, எளிய மக்களுக்கு பகிர்ந்து அளிக்காமல் மோடி அரசானது கார்ப்பரேட் பெரு நிறுவனங் களுக்கே ஒதுக்கீடு செய்துள்ளது. விவசாயிகளுக்குச் சொந்த மான லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங் களை விவசாயிகளிடமிருந்து கட்டாயப்படுத்தி, கையகப் படுத்தி தனியார் நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது. இதற்குப் பெயர் ‘வளர்ச்சி’ என மோடி அரசு கூறுகிறது. காட்டில் வாழும் பழங்குடி மக்களை காட்டைப் பாதுகாக்கும் சட்டங்களைத் திருத்தி அவர்களை சிறையில் இருக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. காட்டில் வாழும் பழங்குடி மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து, சுற்றுலா வளர்ச்சி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் எனச் சொல்லி கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் வசம் அளித்து வருகிறது.
♦ பலரும் ஒன்றைத் தவறாக நம்பிக் கொண்டு இருக் கின்றனர்; பெரும் பணக்காரர்கள் வங்கியில் வைத்திருக்கும் வைப்புத் தொகையிலிருந்து ஏழை மக்களுக்குக் கடன் வழங்கப்படுகிறது என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் பொது மக்கள்தான் வங்கியில் அதிக அளவில் வைப்புத்தொகையினை வைத்திருக்கிறார்கள். அந்தப் பணம்தான் பெரிய நிறுவனங்களுக்கு கடனாக வழங்கப் படுகிறது. கடன் வாங்கிய பெருநிறுவனங்கள் வங்கிக்கு திருப்பிச் செலுத்தாமல் இருப்பது கணிசமான அளவில் உள்ளது. கடன் பெற்ற நிறுவனங்க ளிடமிருந்து அவைகளின் உடமைகளைப் பறிமுதல் செய்து வசூல் செய்வதை விடுத்து, அவர்கள் வாங்கியிருக்கும் ஏறக்குறைய ரூ.30 லட்சம் கோடி கடன் நிலுவைகளை தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு.
♦ கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் செஸ் (CESS) மற்றும் இதரப் பொருட்களின் மீதான சி.எஸ்.டி.(CST) பெருமளவில் உயர்ந்து மக்களுக்குச் வரிச்சுமையாக உள்ளது. ஆனால் பல பெரும் பணக்காரர் களுக்கு ரூ.55 லட்சம் கோடி அளவில் அவர்கள் கட்ட வேண்டிய வரியை தள்ளுபடி செய்துள்ளது ஒன்றிய அரசு.
ஸ் கார்ப்பரேட் நிறுவன வரியானது 33 லிருந்து 25 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. பழைய நிறுவனங்கள், புதிய தொழில்களை புதிய பெயரில் தொடங்கி நடத்தி வருகின்றன. புதிய தொழில்களை வரவேற்கும் விதமாக குறைந்த அளவில் 15 விழுக்காடு வரிமட்டுமே அந்த நிறுவனங்களுக்கு விதிக்கப் படுகிறது. உலகின் எந்த நாட்டிலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்படியான வரிச் சலுகைகளை பெற்றதில்லை.
♦ கடந்த 10 ஆண்டுகளாக மோடி ஆட்சியில் கார்ப்ப ரேட் பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகையையும், தள்ளுபடி செய்யப்பட்ட வரிகளையும் கூட்டிப் பார்த்தால் ஓராண்டிற்கான நிதிநிலை அறிக்கைக்கான தொகையை விட கூடுதலாகவே இருக்கும். எனவே, கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் சொர்க்கபுரி போன்றதாக மோடி அரசு விளங்குகிறது (கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சொர்க்கம் என்பது பொதுமக்களுக்கு நரகமாகத்தான் பல நேரங்களில் இருக்கிறது).
ஸ் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி சட்டமன்றத்தில் உரையாற்றுகிறார்: “அதானி என்பவர் மோடியின் பினாமி” என்று கூறுகிறார். அதானிக்குச் சொந்த மான ஒவ்வொரு உடமையும், உண்மையில் மோடிக்குச் சொந்தமானவையே என அம்பலப்படுத்தினார். நாட்டின் ஒன்றுபட்ட பொதுச்சொத்துகள் எப்படியெல்லாம் அதானி நிறுவனத்திற்கு மாற்றம் பெற்றுள்ளது என்பதையும் ஒவ் வொரு வெளிநாட்டுப் பயணத்தின் பொழுதும் அதானிக்கு பயனளிக்கும் வகையில் அந்த நாட்டு அரசாங்கம் வற் புறுத்தப் பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டினார் (முழு உரை யின் விவரங்களும் You tube வீடியோவில் உள்ளது)
♦ புரிந்து கொள்ளப்பட வேண்டிய கடுமையான உண்மை நிலை என்னவென்றால்-மோடி அரசானது கார்ப்பரேட் நிறுவன அரசாக கார்ப்பரேட் நிறுவனங்களுக் காவே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நடத்தப்படும் அர சாங்கம் என்பதே அது. பெரு நிறுவனங்களுக்கு முழு சலுகைகளையும் தாராளமாக வழங்கி அதன் மூலம் பொதுச் சொத்தை கொள்ளையடிக்கவும், விவசாயிகளை அடக்கி ஆளவும், தொழிலாளர்களைச் சுரண்டிடவும், அனைத்துத் துறைகளிலும் ஏகபோக ஆதிக்கத்தை நிலைநாட்டிடவும், வணிகப் போட்டிச் சூழலை முற்றிலும் மோடி அரசு ஒழித்துள்ளது. ஒன்றிய அரசுக்கும், கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்குமிடையிலான முடிச்சு அப்பட்டமாக தெரிகிறது. மோடி ஒன்றிய அரசு முன்னர் குறிப்பிடப்பட்ட குஜராத்தி மார்வாடிகளின் அரசாக இருக்கிறது. அவர் களுடைய கஜானா நிரப்பப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைத்து வரும் இந்த வில் லன்களால் நாடு சிக்கலில் மாட்டிக் கொண்டு திண்டாடுகிறது.
தமிழில்: வீ. குமரேசன்