சி.பி.அய். தேசிய செயலாளர் டி.ராஜா கருத்து
திருவாரூர். ஏப்.13– எத்தனை முறை வந்தாலும் பிரதமர் மோடியை தமிழ்நாட்டு மக்கள் திரும்பிகூட பார்க்க மாட்டார் கள் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செய லாளர் து. ராஜா கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டியில் இந்திய கம்யூ னிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து.ராஜா 11.4.2024 அன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்த நாடாளுமன்ற தேர் தலில் பா.ஜனதாவிடம் இருந்து சட்டத்தையும், நாட்டையும் காப்பாற்ற வேண்டும். பா.ஜனதா ஆட்சியில் நல்லிணக்க மும், மதச்சார்பின்மையும் முழு மையாக தாக்கப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை பிரதமர் மோடி வந்து போனாலும் தமிழ்நாட்டில் பா.ஜனதா கால் ஊன்ற முடி யாது.
திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்
இதேபோல் அகில இந்திய அளவிலும் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டனர். ஆனால் 400 இடங்களை பிடிப் போம், 370 இடங்களை பிடிப் போம் எனக் கூறி பிரதமர் மோடி மக்களை ஏமாற்றி வருகி றார். எதிர்க்கட்சிகள் மீது அவ தூறையும் பரப்பி வருகிறார்.
பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தா லும் அவரை தமிழக மக்கள் திரும்பி கூட பார்க்க மாட்டார் கள். ஆட்சி பொறுப்பேற்றபோது ஒவ்வொருவரது வங்கி கணக்கி லும் ரூ.15லட்சம் டெபாசிட் செய்வேன் என்று கூறிய பிரதமர் மோடி, தற்போது ஒவ்வொரு வரின் தலையிலும் கடன் சுமையை ஏற்றியுள்ளார்.
இந்தியாவுக்கு நல்லதல்ல
பிரதமர் மோடியின் ஆட்சி யில் கல்வி கொள்கை முதல் அனைத்து மாநில உரிமைகளும், அதிகாரங்களும் பறிக்கப்பட் டுள்ளன. மத்தியில் பா.ஜனதா ஆட்சி தொடர்வது இந்தியா வுக்கு நல்லதல்ல, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யில் 40 தொகு திகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களில் சி.பி.அய்., அமலாக்கத் துறை, வருமானவரித் துறை களை பயன்படுத்தி மிரட்டும் போக்கை பா. ஜனதா கடைப் பிடித்து வருகிறது. அரசு நிறுவ னங்களை பயன்படுத்தி தேர்தல் பத்திரத்தின் மூலம் முறைகேடாக பணம் பெற்றுள்ள கட்சி பா.ஜனதா என்பதை மக்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டின் உரிமையை மீட்போம் எனக் கூறிவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டபோது எங்கு இருந்தார், யாருக்கு ஆதர வாக செயல்பட்டார், குடியு ரிமை திருத்த சட்டம் நிறைவேற் றப்பட்டபோது அ.தி.மு.க.வின் நிலை என்ன என்பது பொது மக்கள், சிறுபான்மையினர் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.
-இவ்வாறு அவர் கூறினார்.