தேர்தல் விதியை மீறும் அண்ணாமலை: தேர்தல் களத்தை வன்முறைக் களமாக்கும் முயற்சி!

viduthalai
2 Min Read

தேர்தல் விதியை மீறும் அண்ணாமலை:
தேர்தல் களத்தை வன்முறைக் களமாக்கும் முயற்சி!
தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

பா.ஜ.க.வைத் தோல்வி பயம் பிடித்து ஆட்டுவதால், தேர்தல் களத்தை வன்முறைக் களமாக்கு கிறது; தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:

இந்தியாவின் போக்கை மாற்றக்கூடிய, ஜனநாயகம் நிலை நிறுத்தப்படுவதற்கான இறுதி வாய்ப்பாகக் கிடைத்திருக்கும் 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலின் முதல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு இன்னும் ஆறு நாட்களே இடையில் உள்ளன. நானூறு இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று மமதையுடன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய பாரதீய ஜனதா கட்சியினர், இந்தியா முழுவதிலும் இருந்து தங்கள் கூட்டணிக்கு எதிராக வரும் கருத்துகளையும், மக்களின் எதிர்ப்பு களையும் கண்டு அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றன

இதன் காரணமாக அமைதியான சூழலில் தேர்தல் நடைபெறுவதை அவர்கள் விரும்பவில்லையோ என்னும் சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே ஆங்காங்கிருந்து தொடர்ந்து வரும் செய்திகள் இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகின்றன.

கோவையில் தொழில் முடக்கம் தொடர்பாக கேள்வி எழுப்பிய ஒருவரை பாஜகவினர் தாக்கும் காணொலி இரு நாள்களுக்கு முன் வெளிவந்தது.
நேற்று (11-4-2024) இரவு 10 மணிக்கு மேல் விதிமுறை களுக்குப் புறம்பாகத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது பாஜக – ஆர்.எஸ்.எஸ். காலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆபாச வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும்…

திருப்பூரில் பாஜகவின் பிரச்சாரக் கூட்டத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள் ளனர். கூட்டம் முடிந்ததற்குப் பிறகு அதில் ஒரு பெண் ணைப் பின் தொடர்ந்து சென்று, அவரது கடையி லேயே அந்த பெண்ணிடம் அடாவடியாக நடந்து கொண்டதுடன், ஆபாச வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும், அவரது செல்பேசியைப் பறித்தும் தாக்கி யுள்ளனர்.
எந்தக் கட்சியினராயினும், தேர்தல் பரப்புரைக்காக மக்களைச் சந்திக்கும்போது, வாக்காளர்களின் கேள்வி களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். நேரடி யாக அரசியல் கட்சியிடம் கேள்வி எழுப்பும் வாய்ப்பும் மக்களுக்கு அப்போதுதான் கிடைக்கிறது.

பல்வேறு கட்சியினரும் மக்கள் திருப்தி அடைகிறார் களோ இல்லையோ, அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துவிட்டுத்தான் அங்கிருந்து திரும்புகின்றனர்.

பா.ஜ.க.வின் அடாவடிச் செயல்கள் ஜனநாயகத் தேர்தலுக்கு நல்லதல்ல!

ஆனால், மக்கள் கேள்வி எழுப்பினால் வன்முறை யில் இறங்கும் பா.ஜ.க.வின் இத்தகைய அடாவடிச் செயல்கள் தொடர்வது ஜனநாயகத் தேர்தலுக்கு நல்லதல்ல.
காவல்துறையும் குறிப்பாக தேர்தல் ஆணையமும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து பா.ஜ.க.வின் அராஜகங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
முறையான, அமைதியான பிரச்சாரங்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளையும், நெருக்கடிகளையும் உருவாக்கும் தேர்தல் ஆணையம் – இத்தகைய வன் முறைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக் கைகளை எடுக்கத் தவறக் கூடாது.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
12-4-2024 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *