சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கை
லக்னோ,ஏப்.12- உத்தரப் பிரதேச பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சி நேற்று (10.4.2024) தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும், அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும், பயிர் களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந் துரைகளின்படி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் முதலான முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உத்தரப் பிரதேச பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சி 10.4.2024 அன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
லக்னோவில் உள்ள கட்சி தலை மையகத்தில் மூத்த தலைவர்களுடன் இணைந்து அகிலேஷ் யாதவ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப் பட்டு, அதன் அடிப்படையில் சமூக நீதி நிலைநாட்டப்பட வழிவகை செய்யப்படும் என்பது உள்பட பல்வேறு முக்கிய அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
சமாஜ்வாதி தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
*அனைத்து பயிர்களுக்கும், பாலுக் கும் குறைந்தபட்ச ஆதார விலை. இதன் கணக்கீடு எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையின்படி அமையும்.
* அனைத்து விவசாயிகளுக்கு மான எம்எஸ்பி-க்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படும்
* அனைத்து விவசாயக் கடன் களும் ரத்து செய்யப்படும். நிலமற்ற விவசாயிகளின் கடன் உட்பட அனைத்தும் 2024-க்குள் தள்ளுபடி செய்யப்படும்.
* விவசாயிகளுக்கான நீர்ப்பாச னம் இலவசமாக வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு கடன் வழங் குவதை ஆராய ஒரு குழு அமைக் கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய முறையில் நிவாரணம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
* சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற அல்லது வாடகை நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மாதந் தோறும் ரூ.5000 ஓய்வூதியம் வழங் கப்படும்.
*மாநிலத்தின் பிரதான விவசாய மாவட்டங்கள் அனைத்திலும் 10 கிலோ மீட்டருக்கு ஒரு சந்தை அமைக்கப்படும்.
*கரும்பு விவசாயிகளுக்கான நிதியை நிலுவையில்லாமல் வழங்க ஏதுவாக ரூ.10 ஆயிரம் கோடி சுழல் நிதி ஏற்படுத்தப்படும்.
*தனியார் விவசாய கூலிகளுக்கு ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் அவர்கள் கூலியின் 40 சதவீதம் வழங்கப்படும்.
*தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி ரூ.450 ஆகவும், வேலை நாட்கள் 150 ஆகவும் அதிகரிக்கப்படும்.
*நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் அமர்விலேயே ஊரக வேலை உறுதித் திட்டம் போல் நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் ஒன்றும் உரு வாக்கப்பட்டு அமலுக்குக் கொண்டு வரப்படும்.
*அனைத்து அரசு காலிப் பணியிடங்களும் உடனடியாக நிரப்பப் படும்.
*தேசிய வேலைவாய்ப்பு கொள்கை உருவாக்கப்படும்.
*நாடு முழுவதுமான இளைஞர் களுக்கு இலவச மடிக் கணினி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
*அரசு தேர்வு வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வில் ஊழல்கள் அகற்றப்படும் போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.