தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் வழக்குரைஞர் ஆ,மணி அவர்களை ஆதரித்து கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஒன்றிய குழு தலைவர் பி.சி.ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாவட்டக் கழக தலைவர் கு.சரவணன், கழக காப்பாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அரூர் சா.இராஜேந்திரன், இளைஞரணி தலைவர் த.மு. யாழ்திலீபன், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் இர. கிருஷ்ணமூர்த்தி, ஊமை. காந்தி, மாஸ்டர் மாணிக்கம், என்.டி. குமரேசன், அரூர் செந்தில் உள்பட தோழர்கள் பங்கேற்றனர்.