12.4.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ இந்த மக்களவைத் தேர்தல் நாட்டின் அரசமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கானது. இது பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர், பொதுப் பிரிவில் உள்ள ஏழைகளின் தேர்தல். இன்று நாட்டின் மிகப் பெரிய பிரச்னை வேலையின்மை, அதைத் தொடர்ந்து பணவீக்கம். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தான் மிகப்பெரிய பிரச்சினை என ராகுல் தேர்தல் பரப்புரையில் பேச்சு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னணியில் உள்ளது. தரவுகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜகவிற்கு பதிலடி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ ‘நாட்டுக்காக ரத்தம் சிந்த தயார்’ மே.வங்கத்தில் சிஏஏ, என்ஆர்சியை ஏற்க மாட்டோம்: மம்தா ஆவேசம்.
♦ மோடி அரசின் அக்னி வீர் திட்டம் தேவையில்லை – ராகுல் காந்தி.
♦ காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு அமோக வரவேற்பு. ‘2 லட்சம் கருத்துகள், 10,000 மின்னஞ்சல்கள்’ என ராகுல் காந்தி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்கள் கருத்துகளை விவாதித்தார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ ஆட்சி மாறியதும் ரகசியங்கள் தோலுரிக்கப்படும் தேர்தல் பத்திரம், பணமதிப்பிழப்பு பாஜகவின் மிகப்பெரிய ஊழல்கள்: யஷ்வந்த் சின்ஹா பேட்டி.
♦ தென்னிந்தியாவில் வாக்காளர்கள் பொதுவாக சமூக நீதிக்கான முறையீடுகளில் வலுவாக வேரூன்றிய பிராந் தியக் கட்சிகளை ஆதரிக்கின்றனர், மேலும் மோடியின் இந்துத்துவ தேசியவாதத்திற்கு சிறிய ஈர்ப்பு கூட இல்லை என பத்திரிக்கை கருத்து.
♦ அதிமுக போட்டியாளர், பாஜக எங்கள் சித்தாந்த எதிரி என முதலமைச்சர் பேட்டி.
தி ஹிந்து:
♦ CSDS-Lokniti தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு: பதிலளித்தவர்களில் 60% க்கும் அதிகமானோர் இப்போது வேலை கிடைப்பது மிகவும் கடினமாகிவிட்டது என்றும் பதிலளித்தவர்களில் 71% பேர் கடந்த அய்ந்தாண்டுகளில் விலைகள் கணிசமாக அதிகரித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
தி டெலிகிராப்:
♦ வேலைகள் எங்கே?’: விவசாயிகளுக்கு ஏழ்மை, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரதமர் மோடியிடம் கேள்வி
♦ மக்களவைத் தேர்தலில் தெற்கில் பாஜகவின் முன்னெடுப்பு எந்த பயனும் தராது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் திட்டவட்டம்.
– குடந்தை கருணா