பெரம்பலூர், ஏப். 12- பெரம்பலூர் நாடாளு மன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேருவை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, 9.4.2024 அன்று இரவு பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத் தில் மக்கள் அலைகடலென திரண்டி ருந்த பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
நேரு பிரதமராக இருந்தார். உலகமே இரண்டாக பிரிந்து கிடந்தது. ஆயுதமும், அறிவும் இருக்கிற காரணத்தால் அமெரிக்காவிடமும், ரஷியாவிடமும் கூறி உலகத்தில் அணி சேரா நாடுகளை கொண்டு வந்தவர் ஜவஹர்லால் நேரு.
உலக அமைதிக்கான தூதுவர் என்று ஜவஹர்லால் நேருவை அய்.நா. சபை அறிவித்தது. அந்த அய்.நா. சபை தற்போது இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று கூறி பிரதமர் மோடியை கண்டிக்கிறது.
காந்தியார் பாடுபட்ட இந்த மண்ணில் சீக்கியம்,பவுத்தம் என்று பல மதங்கள், பல மொழிகள் உள்ளன. ஒவ் வொரு மாநில மக்களுக்கும் பல்வேறு வகையில் அந்தந்த மாநிலங்களுக்கேற்ப உள்ளது.
ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே உடை, ஒரே உணவு, ஒரே தேர்தல் என்று மோடி கொண்டு வர நினைக் கிறார். அதற்கான வேலைகளை தற் போது மோடி துவக்கி விட்டார்.
அம்பேத்கர், நேரு, காந்தியார் கொண்டு வந்த அரசியல் சட்டங்களை மோடி ஒழிக்க நினைக்கிறார்.
மணிப்பூர் விவகாரத்தை நாடாளு மன்றத்தில் விவாதிக்க கேட்டோம். அனுமதி தரவில்லை. மணிப்பூர் முதல மைச்சர் பைரோன் சிங்கை மாற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசினோம் – நடக்கவில்லை.
பா.ஜ.க.வினர் 350 பேர் ஜெய்சிறீராம் என்று கூறி நாடாளுமன்றத்தின் உள்ளே வந்தனர், நாங்கள் 35 பேர் பெரியார் வாழ்க என்று முழக்கம் போட் டோம். ஆடிப்போய்விட்டனர்.
1775 முதல் ஜெயலலிதா வரை நடை பெற்ற பல்வேறு வழக்குகளில் நிறைய விடயங்கள் நடைபெற்று இருக்கிறது.
எனது வழக்கில் அதிகாரிகள் 14 நாட்கள் என்னிடம் கேள்வி கேட்டனர். அதையெல்லாம் முறியடித்து வந்தவன் நான்.
6 ஆயிரம் கோடி தேர்தல் பத்திரங் கள் மூலம் பா.ஜ.க.விற்கு நன்கொடை வந்துள்ளது. அதில் நட்டம் அடைந்த கம்பெனிகள் மூலம் பணத்தை உள்ளே விட்டு வெளியே கொண்டு வந்துள் ளனர். ஊழல் நிறைந்தவர்கள் பா.ஜ.க. உள்ளே சென்றால் ஊழல் எல்லாம் மறைத்து விட்டு புனிதமாகிவிடுகின்ற னர் என்று பேசினார்.
இந்த பிரச்சாரத்தின் போது, மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளரும் – பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான அன்னி யூர் சிவா, மாநில ஆதிதிராவிடர் நலக் குழு துணைச் செயலாளர் துரைசாமி உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பெருந் திரளாக கலந்து கொண்டனர்.