நாகர்கோவில், ஏப்.12- பா.ஜனதாவுக்கு அடிமையாக இருந்து தமிழ்நாடு மக் களின் உரிமைகளை விட்டு கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் நின்றபடி தக்கலை பகுதியில் பிரச்சாரம் செய்தார். பின்னர் அவர் நாகர்கோவிலில் வாக்குகள் சேகரித் தார். இந்த பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில் கூறியதாவது:-
கை சின்னத்தில் ஓட்டு போடுவது மக்கள் மோடிக்கு வைக்கும் வேட்டு. இதன் மூலம் தமிழ்நாடு மக்கள் சுயமரியாதை உடையவர்கள் என்பதை நாம் காட்ட வேண்டும்.
முதலமைச்சர் பதவிக்காக நாற்காலி. மேஜைக்கு இடையே தவழ்ந்து போய் சசிகலா காலில் விழுந்தவர் எடப்பாடி பழனிசாமி. பின்னர் சசிகலா காலையும் வாரிவிட்டவர். கடந்த 4 ஆண்டுகள் பா.ஜனதாவிற்கு அடிமையாக இருந்து தமிழ்நாடு மக்களின் உரிமைகளை விட்டுகொடுத்தவர்.
தேர்தல் அறிக்கையின்படி முதல் கையெ ழுத்தாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3 தமிழ்நாடு அரசு குறைத்தது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் மூலம் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்.
காலை உணவுத் திட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகிறார்கள். கனடா நாட்டின் அதி பர் தமிழ்நாட்டில் உள்ள முதலமைச் சரின் காலை உணவுத் திட்டத்தை பாராட்டி செயல்படுத்தி உள்ளார். கலைஞர் உரிமைத் தொகை மூலம் 1 கோடியே 18லட்சம்பேரின் வங்கி கணக் கில் நிதி செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது ஒரு குடும்பம் தான் என கூறுகிறார்கள். ஆம் தமிழ்நாடு மக்கள் அனைவரும் மேனாள் முதலமைச்சர் கலைஞர் குடும்பம்தான். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் ஒன்றைத்தான் சொன்னார். தி.மு.க .வுக்கு வாக்களித்தவர் களுக்கு உண்மை யாக உழைப்பேன். அவர்கள் பெரு மைப்படும் அள வுக்கு நான் முதல மைச்சராக நடந்து கொள்வேன். தி.மு.க. கூட்டணிக்கு வாக் களிக்காத வர்கள், ஏன்தான் தி.மு.கவுக்கு வாக் களிக்காமல் விட் டோமோ? என்று வருத் தப்படும் அளவுக்கு உழைப்பேன் என்றார். மொத்தத்தில் எல்லோருக்கும் பொதுவான முதல மைச்சராக இருப் பேன் என்றார். சொன்னபடி, சொன்ன வார்த்தையை காப்பாற்றியிருக்கிறார்.
பா.ஜனதா கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தையும் ஆதரித்து மாநில உரிமைகள் அத்தனை யையும் பா.ஜனதாவிடம் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்து விட்டார். மாநில உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை என அனைத்தையும் அடகு வைத்து விட்டார். அவற்றை எல்லாம் மீட்க இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தாக வேண்டும்.
-இவ்வாறு அவர் பேசினார்