சென்னை, ஏப்.12 -திராவிட இயக்கத்தைத் துடைத்தெறிவேன் என்று கூறி இறுமாப்புடன் செயல்பட்டு வரும் பாசிஸ்ட் மோடிக்கு பாடம் புகட்டுவோம் என ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் வைகோ கூறியுள்ளார். ஊடகம் ஒன்றிற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளரும் வைகோ நேர்காணல் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ள தாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றிபெறும். இங்கு பா.ஜ.க.வின் சித்துவேலை எடுபடாது. நாங்கள் தீப்பெட்டி என்ற தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம். கட்சியின் தனித்தன்மை கருதி இந்த முடிவை எடுத்துள்ளோம். உதயசூரியன் சின்னத்தில் நிற்காததற்கு இதுதான் காரணமே தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. இதை தி.மு.க. தலைமையிடம் தெளிவாக எடுத்துரைத்து விட்டோம்.
‘கோமாதா கோட்டம்’ என்று சொல்லப்படும் உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. வலுவாக உள் ளது. மற்ற மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க.வுக்கு எதிரான அலை வீசுகிறது. இது தேர்தல் திருப்பு முனை யாக அமையும். பா.ஜ.க. ஆட்சியில் சிறு பான்மையினர் அச்சுறுத் தப்படு கிறார்கள். மிரட் டப்படுகிறார்கள். விலைவாசி தாறுமாறாக உயர்ந்து விட்டது. எரிபொருள் விலை விண்ணை நோக்கி சிறகடித்ப் பறக்கிறது. பிரதமர் மோடி ஜனநாயக ரீதியாக செயல் படுவதே இல்லை. முக்கிய மசோதாக்கள் தொடர்பாக அவர் எந்தக் கருத்தையும் தெரிவித்ததும் இல்லை. எதையும் பேசுவதும் இல்லை. அவரது பேச்சில் இறுமாப்பு மேலோங்கி உள்ளது.
பாசிசப் பாதையில் பயணிக்கும் நரேந்திரமோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள். திரா விட இயக்கத்தை அடியோடு துடைத் தெறிவேன் என்று ஆணவமாகக் கூறிய மோடிக்கு இந்த தேர்தல் வாயிலாக மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி திருப்திகரமாக உள்ளது. நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் முகங்களில் மகிழ்ச்சி பளிச்சிடுவதைப் பார்க்கிறேன்.
பல நல்ல திட்டங்களை மு.க. ஸ்டாலின் கொண்டு வந்து நிறைவேற்றி வருகிறார். காலை உணவுத் திட்டம் மிகவும் அபார மானது.
வெள்ளத்தால் தமிழ்நாடு தத்தளித்த போது மக்களுக்கு ஆறுதல் கூற பிரதமர் மோடி வரவில்லை. ஆனால் இப்போது தேர்தல் காலத்தில் அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்வதற்காக மோடி அடிக்கடி இங்கு வருகிறார். அவரது நிலைப்பாட்டை தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்து கொண் டுள்ளனர். எனவே தமிழ்நாட்டில் தாமரை மலர வாய்ப்பில்லை.
-இவ்வாறு வைகோ அவர்கள் கூறியுள்ளார்.