அய்யா (ஆசிரியர்) வந்திருக்கிறார்கள் என்று வேக வேகமாக வந்தோம். வண்டி நகரவே இல்லை. மக்கள் அதிகமாகக் கூடிவிட்டார்கள். குறிப்பாகப் பெண்கள். இப்போது எங்கே பார்த்தாலும் ஒரு புத்துணர்வு உண்டாகிவிட்டது. நீங்களும், அன்புத் தம்பி (ஆசிரியர், முதலமைச்சர்) மற்றும் இந்தியா கூட்டணித் தலைவர்களுமாக எல்லாரும் சேர்ந்து இந்தியாவையே ஒரு கலக்கி கலக்கிட்டீங்க. முதல் நாள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று நினைத்தேன். நாளாக நாளாக கூட்டம் அதிகமாயிட்டே இருக்கு. திக்குமுக்காடிப் போயிட்டேன். அன்பு சகோதரிகள் ஏன் இப்படி செய்கிறார்கள்? கேட்ட கேள்வியையே திரும்பக் கேட்க வேண்டியிருக்கு. ”ஏம்மா எதுக்கு இவ்வளவு கூட்டம் கூடியிருக்கீங்க?” அவங்க சிரிக் கிறாங்க. உரிமைத் தொகை கொடுத்தாங்களே, மாதம் 1000 ரூபாய், அதுக்காகவா? என்று கேட்டேன்” அதுக்கொரு சிரிப்பு! “சரி, 421 கோடி விடியல் பயணம் பண்றீங்களே! அதுக்காகவே? என்று கேட்டேன்” அதுக்கும் ஒரு சிரிப்பு! ”உங்க அன்புக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் கொடுக்கறமே; 15 லட்சம் குழந்தைகள் சாப்பிடுகிறார்களே அதுக்காகவா?” அதுக்கும் ஒரு சிரிப்பு! “சரி, உங்க பெண் 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர்கல்விக்குப் போகுதே, அதுக்கு 1000 ரூபாய் கொடுக்கிறமே, அதுக்காகவா? இப்போ தமிழ்ப்புதல்வன் ஒரு திட்டம் ஆரம்பித்து வருகிற ஏப்ரலில் இருந்து கொடுக்கப்போகிறோமே, அதுக்காகவா? அதுக்கொரு சிரிப்பு! “நமுட்டு சிரிப்பு இல்லை. உண்மையான சிரிப்பு. ”நாங்கள் இதை யெல்லாம் வெளியில் காட்ட மாட்டோம். இதற்கு நன்றிக்கடன் காட்டுவதற்கு ஏப்ரல் 19 ஆம் தேதி காட்டுவோம்” என்று தான் சொல்கிறார்கள்.
நாம் உட்கார வேண்டிய இடத்தில் அவர்கள் தவறாக வந்து உட்கார்ந்து விட்டார்கள். 37 விழுக்காடு ஓட்டு வாங்கி ஆளும் கட்சியாக அமர்ந்தார்கள். ஆளுங்கட்சியாக உட்கார வேண்டிய இந்த 28 பேரும் எதிர்க்கட்சியாக உட்கார்ந்துட்டோம். அத னால் என்னென்ன வரக்கூடாதோ அதெல்லாம் வந்துவிட்டது. என்னென்ன செய்யக்கூடாதோ அதெல்லாம் அவங்க செஞ்சுட்டாங்க. இப்படியொரு குடியுரிமைத் திருத்தச் சட்டம் வெற்றி பெறுவதற்கு 12 ஓட்டு பற்றாக்குறையாக இருந்தது. 10 ஓட்டு அ.தி.மு.க. ஓட்டு. ஒரு ஓட்டு ஜி.கே.வாசன், இன்னொரு ஓட்டு தம்பி அன்புமணி ஓட்டு. 12 பேரும் ஓட்டு போட்டாங்க. பா.ஜ.க. வெற்றி பெற்றுவிட்டது. இந்தத் தவறை சரி செய்ய வேண்டுமானால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தான் முடியும். இல்லையென்றால் இந்த நாட்டில் ஜனநாயகமே இருக்காது. ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள். ஓட்டுரிமை இருக்காது. குடியரசு ஆட்சி வரும்.
ஒரு சிறு திட்டம், சட்டம் கொண்டு வந்தால்கூட ஆளுநர் கையெழுத்து போட மாட்டேன் என்கிறார். ஆளுநரை வைத்துக் கொண்டு என்ன செய்வது? போன முறை நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள். நான் என்னுடைய கடமையைச் சரியாகத்தான் செய்தேன். பா.ஜ.க.மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த தகறாரும் இல்லை. ஒரு பிரதமர் ஒரு மாநிலத்துக்கு 10 முறை போனதுண்டா? இவ்வளவு அவமானத்தையும் தாங்கிக் கொண்டு அவர் இங்கே வரக்கூடாது. 25 கோடி மக்கள் பட்டினி கிடக்கிறார்கள் இந்தியாவில். உலகளவில் பட்டினிக்குறியீட்டில் 125 நாடுகள் உள்ளன. இந்தியா 111 ஆம் நாடாக இருக்கிறது. இந்தியா எப்படி செல்வம் செழிக்கும் நாடாக இருக்க முடியும்? இதற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளன. ஆனால், செல்வம் கொழிக்கும் நாடாக இருக்கும் கனடாவின் பிரதமர் நம் தமிழ்நாட்டில் 17 லட்சம் குழந்தைகளுக்கு நம் முதலமைச்சர் கொண்டு வந்த காலை உணவுத் திட்டத்தை அவர்கள் நாட்டில் கொண்டு வரப் போகிறார்கள்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஏன் வரவில்லை என்று 5 ஆண்டுகளாக கேட்டுக் கொண்டே இருக் கின்றோம். வரவில்லை. நிவாரண நிதி வரவில்லை. நம்ம பிரதமர் ரொம்ப நல்லவர்; ஆனால் நன்றாக நடிப்பார். அய்யா (ஆசிரியர்) சொன்னாருன்னு நம்ம முதலமைச்சர் சொல்லி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமித்ஷாவைப் பார்த்தோம். ”ஜனவரி 27 ஆம் தேதிக்கு முன் நிதி வரும்” என்று அமித்ஷா சொன்னார். இதை ஓடுகிற கங்கை நீரில் தான் எழுதி வைக்க வேண்டும். இதுவரையிலும் வரவில்லை. இப்படி ஓரவஞ்சனை செய்கிற ஒன்றிய அரசை; மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நாள் தான் ஏப்ரல் 19 ஆம் தேதி! இந்த ஆட்சி மாறவில்லை என்றால், நமது சுயமரியாதைக்கு; பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் ஊட்டி வளர்த்த உணர்வுக்கு இழுக்கு ஏற்படும். ஆகவே, அனைவரும் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள்.
(கொரட்டூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்
தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு (11.04.2024)