கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

11.4.2024

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
♦ ராமன் கோவில் குறித்து பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் பேசுகிறார். இதற்கு பதிலடியாக வேலையின்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வேண்டும் என்கிறது தலையங்க செய்தி.
♦ ஜாதிவாரி கணக்கெடுப்பு, அக்னிபாத் திட்டம் ரத்து உள்ளடக்கிய வாக்குறுதிகள் சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை
♦ பொய் பல்கலைக்கழகத்தின் வேந்தராகும் தகுதியுடையவர் பிரதமர் மோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்.
♦’மோடி காரண்டி’க்கு பதிலடியாக ‘மோடி வடை’ தேர்தல் பிரச்சாரத்தில் பிரபலமாகியுள்ளது.
♦ ஜாதிவாரி கணக்கெடுப்பு, 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு ரத்து குறித்து பிரதமர் மோடியின் பதில் என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
♦பவுத்தம் தனி மதம், ஹிந்துக்கள் மதம் மாற அனுமதி பெற வேண்டும் என குஜராத் அரசு ஆணை.
♦ சைனிக் பள்ளிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு மல்லி கார்ஜுன் கார்கே கடிதம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு தரப்படுவதாக குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
♦ தனது கைது ஜனநாயகத்தின் கோட்பாடுகளுக்கு எதிரான முன்னோடி இல்லாத தாக்குதல், விடுவிக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல்.
தி இந்து
♦ காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்த பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு பதிலடி தந்துள்ள ராகுல் காந்தி, ‘அரசியல் களத்தில் கூறும் பொய்களால் வரலாறு மாறி விடாது’ என கூறி உள்ளார்.
தி டெலிகிராப்
♦ பிரதமர் மோடி பிரச்சினைகளைப் பற்றி பேசவில்லை என்றால், அவரால் 100 இடங்களைக் கூட தாண்ட முடியாது என தேஜஸ்வி பேச்சு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *