10.4.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் மத விரோத சக்திகளை எதிர்த்துப் போராடுகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* மோடி அரசில் அமைச்சராக இருந்த அரியானா மாநிலத்தை சேர்ந்த விரேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார். ஜனநாயகத்தைக் காக்க விலகினேன் என பேட்டி.
* நான் மீண்டும் வருவேன் என்கிறார் பிரதமர் மோடி. அதே வார்த்தையைத் தான் மகாராட்டிராவில் அன்றைய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சொன்னார். என்ன நடந்தது? என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் சுனில் கடாடே.
* பெண்கள் நலன் சார்ந்த திட்டமான, கட்டணமில்லா பேருந்து பயணம், கிரக ஜோதி திட்டம், இந்திரா காந்தி வீட்டு வசதி திட்டம் அனைத்தும் பெண்களிடம் நல்ல வரவேற்பை தெலங்கானாவில் பெற்றுள்ளது காங்கிரசுக்கு பெண்கள் மத்தியில் செல்வாக்கை உயர்த்தியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சர்வாதிகார ஆட்சிக்கும் ஜனநாயகத்துக்கும் இடையே ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் இது: சாகு மகாராஜ் சத்ரபதியின் வாரிசு அலோக் தேஷ் பாண்டே பேச்சு.
* பொருளாதாரத்தில் எச்சரிக்கை மணி ஒலிக்கிறது, குடும்பங்கள் மெதுவாக கடனில் மூழ்குகின்றன: மோடி அரசின் பத்தாண்டு சாதனை என காங்கிரஸ் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாஜக விவசாயிகளுக்கு எதிரானது, ஜனநாயகத்துக்கு எதிரானது, கூட்டாட்சிக்கு எதிரானது மற்றும் கார்ப்பரேட் களுக்கு ஆதரவானது, எனவே அதை கடுமையாக எதிர்த்து அம்பலப்படுத்த வேண்டும் என பஞ்சாப் விவசாயிகள் போர்க்கொடி. மோடி ஆட்சி மீது 11 கேள்விக்கணை எழுப்பியுள்ளனர்.
* வளர்ச்சியைப் பற்றி பேசத் தவறிய பாஜக மதப் பிரச்சினைகளை எழுப்புகிறது: சச்சின் பைலட்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உத்தவ் தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே மகாராட்டிராவில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. உத்தவ் கட்சிக்கு 21, காங்கிரஸ் 17, பவார் கட்சி 10 என தொகுதிகள் முடிவு.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment