ஆபிரகாம் கோவூர் கேரளாவில் திருவள்ளா என்னுமிடத்தில் 10.04.1898இல் பிறந்தார். கொல்கத்தாவில் கல்வி கற்றார். கேரளாவில் சில காலம் கல்லூரி உதவி விரி வுரையாளராக இருந்தார்.
கோவூர் தன் வாழ்க்கையின் பெரும் பாலான காலத்தைக் கொழும்பில் கழித்தார்.
இலங்கையில் பல பாடசாலைகளில் தாவ ரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து கொழும்பு தோஸ்டன் கல்லூரியிலிருந்து 1959இல் பணி ஓய்வு பெற்றார்.
இறுதிவரை அவர் தீவிர பகுத்தறிவாளராகவே கொள்கை முழக்கம் செய்தார்.
தான் கடவுளின் அவதாரம் அல்லது தெய்வீக ஆற்றல் உள்ள மகான் என்று சொல்லும் அனைவருமே பொய்யர்கள், ஏமாற்றுவாதிகள் என்பதை நிறுவுவதே கோவூரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.
‘RATIONALIST ASSOCIATION OF SRI LANKA’ என்னும் சங்கத்தை தோற்றுவித்து, வெகுகாலம் அதன் தலைவராக இருந்தார்.
ஆவி, பிசாசு தொடர்பாக கூறப்பட்ட எல்லாவகை விந்தை நிகழ்வுகளையும் அரை நூற்றாண்டுகளுக்கும் மேல் ஆராய்ந்தவர்.
அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான ஏதும் சிறிதும் இல்லை என்று முடிவு கண்டவர் கோவூர்.
ஆவி, பேய் ஆகியவை தொடர்பான ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும் ஒன்று ஏமாற் றுக்காரர்களாக இருக்கவேண்டும் அல்லது மூளைக் கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவரின் உறுதியான கருத்தாகும்.
அவை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டாருள், அத்துறைப் பணிக்காக ‘மின்னசோட்டா மெய்யறிவு நிலையம்’ கவுரவ முனைவர் பட்டம் வழங்கியது – இத்தகைய பட்டங்களை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்த கோவூர் முனைவர் பட்டத்தை திருப்பி அனுப்பினார்.
இயற்கைக்கு அப்பாற்பட்ட வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும் உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும் மோசடியின்றி செய்முறைகள் மூலம் அவர்கள் திறமைகளை மெய்ப்பித்துக்காட்ட முடியுமானால், அவருக்கு ஒரு லட்சம் சிறீலங்க ரூபாய் பரிசளிக்க அவர் தயாராக இருப்பதாக அறைகூவினார்.
தான் இறக்கும் வரையில் அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில் இந்த அறிவிப்பு செயற்பாட்டில் இருக்கும் என்று அறிவித்தார்.
இறுதி வரையில் எவருமே முன்வரவில்லை.
“எனக்கு சாவைக் கண்டு அச்சமில்லை, எனவே, என்னை புதைக்க வேண்டாம்” என்று தன் உயில் எழுதி வைத்த கோவூர், தன் கண்களை ஒரு கண் வங்கிக்கு கொடையாக அளித்தார் ; தன் உடலை மருத்துவக் கல்லூரிக்கு ஆய்வுக்காகவும் தன் எலும்புக்கூடு தற் சுட்டன் கல்லூரியின் அறிவியல் ஆய்வகத்திற்கு அளிக் கப்பட வேண்டும் என்றும் எழுதியிருந்தார்.
வாழ்க கோவூரார்!