உ.பி, குஜராத் பஞ்சாயத்தில் சத்திரியர்கள் முடிவு
லக்னோ, ஏப்.10 குஜராத்தில் பாஜகவிற்கு எதிராக பல்வேறு சத் திரிய இடைநிலை ஜாதி குழுக்கள் திரும்பிய நிலையில் தற்போது உத் தரப் பிரதேசத்திலும் பாஜகவிற்கு எதிராக களம்காண தொடங்கி உள்ளனர்.
ராஜ்புட் உள்ளிட்ட சத்திரிய வம்சத்து மன்னர்கள் ஆங்கிலேயர் களுடன் நெருக்கமாக, அடிமை போல இருந்தனர். ஆங்கிலேய மன்னர்கள் கொடுத்ததை வைத்து ஆட்சி செய்தனர் . தங்கள் பெண் களை கூட ஆங்கிலேயர்களுக்கு மணமுடித்து கொடுத்தனர் என்று விமர்சனம் செய்யும் தொனியில் ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா பேசி இருந்தார். பாஜகவை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா இதன் மூலம் சத்திரிய வம்சத்து அரசர்களை அவ மதித்துவிட்டதாக சத்திரியர் இடையே விமர்சனம் வைக்கப்பட்டது.
ஒன்றிய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவின் கருத்துக்கு எதிராக குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக ‘சத்திரிய’ சமூகத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட் டத்தில் நேற்று ‘(18.4.2024) சத்திரிய’ சமூகத்தினர் பாஜகவிற்கு எதிராக பஞ்சாயத்து நடத்தினர். சத்திரிய சமூகத்தின் நலன்கள் மற்றும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை ‘எதிர்ப் பது’ பற்றி இதில் ஆலோசிக்கப் பட்டது.பாஜகவிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்று சத்தி ரிய ஜாதி பிரிவை சேர்ந்த உறுப் பினர்களுக்கு இந்த பஞ்சாயத்தில் அறிவுறுத்தப் பட்டது.
சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள நானவுடா என்ற இடத்தில் நடைபெற்ற இந்த பஞ்சாயத்தில் அரியானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலம் மற்றும் நாட் டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சத்திரிய சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர். உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுக்க எந்த மாநிலத்திலும் சத்திரியர்கள் பாஜகவிற்கு வாக் களிக்கக்கூடாது என்று இதில் முடிவு எடுக்கப்பட்டது.வடஇந்திய பஞ்சாயத்துகளில் எடுக்கப்படும் முடிவுகள், அதில் கலந்து கொள்ளும் எல்லோராலும் மிக தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் என்பதால் பாஜகவிற்கு இந்த முடிவு அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.
கிசான் மஸ்தூர் சங்கதன் தலைவரும், சமூகத் தலைவருமான தாக்கூர் பூரன் சிங் இது பற்றி கூறு கையில், பாஜக வேட்பாளர்களை தோற்கடிக்க எந்த கட்சிக்கு சிறந்த வாய்ப்பு உள்ளதோ அந்த கட்சிக்கு எங்கள் சமூகத்தினர் ஆதரவளிப் பார்கள். நாங்கள் எப்போதும் பாஜகவை ஆதரித்தோம், ஆனால் அவர்கள் ராஜ்புத் தலைவர்களை ஓரங்கட்டி வருகின்றனர். மக்கள வைத் தேர்தலுக்கான சீட்டு விநி யோகத்தில் எங்கள் சமூகம் புறக் கணிக்கப்பட்டுள்ளது, என்றுள் ளார்.
பஞ்சாயத்தில் பேசிய பேச்சா ளர்கள், தங்கள் சமூகத் தலைவர் களுக்கு பாஜக அமைப்பிலும் பதவி வழங்கப்படவில்லை. சமூகத்தினர் ஒற்றுமையாக இருந்து தேர்தலில் காவி கட்சியை எதிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, ஏப்ரல் 16 அன்று மீரட் மாவட்டத்தில் உள்ள சர்தானாவில் சமூகத் தலைவர்களின் மற்றொரு கூட்டத்தை நடத்த பஞ்சாயத்து முடிவு செய்தது.மேற்கு உ.பி.யின் சஹாரன்பூர், மீரட், முசாபர்நகர், பாக்பத், கைரானா, காசியாபாத் மற்றும் கவுதம் புத் நகர் உள்ளிட்ட எட்டு மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதேபோன்ற பஞ்சாயத்துகள் சில நாட்களுக்கு முன்பு முசாபர்நகர் மாவட்டத்திலும் நடைபெற்றன. பாஜக வேட்பாளர் சஞ்சீவ் பாலி யானை எதிர்க்குமாறு சமூகத் தினரை கேட்டுக் கொண்டார்.
குஜராத்தில் சத்திரிய சமூகத்தைச் சேர்ந்த மன்னர்கள் ஆங்கில ஆட்சியாளர்களின் துன்புறுத்த லுக்கு இணங்கி, அவர்களுக்குத் தங்கள் மகள்களைத் திருமணம் செய்து வைத்ததாக ரூபாலா கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த சமூகத்தின் பஞ்சாயத்துகள் முடிவு எடுத்த நிலையில் தற்போது சத்திரியர்கள் -_ பாஜக மோதல் வடஇந்தியாவில் தீ போல பரவத் தொடங்கி உள்ளது.