சென்னை, ஏப். 10- தமிழ்நாடு மருந்தியல் நல அறக்கட்டளையின் மருந்தியல் புலமை மற்றும் பயிற்சி நிறுவனம் 4.3.2024 முதல் 21.3.2024 வரை நடத்திய தொழில்சார் பயிற்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் இளநிலை மருந்தியல் நான்கா மாண்டு மாணவிகள் க. நந்தினி, மு. தர்சனா, ச.சிவரஞ்சனி, பா. சுதா மற்றும் செ.பிரவீனா ஆகியோர் கலந்து கொண்டு தொழில்சார் பயிற்சிகளை பெற்றனர்.
இதில் மாணவர்களின் தொழில் திறனை வளர்க்கும் விதமாக பல்வேறு தொழில் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு, மருந்தியல் துறை யின் பணிவாய்ப்புகள், மருந்து தயாரிப்பு, உற்பத்தி, தர நிர்ணயம், தரக்கட்டுப்பாடு, பகுப்பாய்வு, ஆவ ணப்படுத்துதல் போன்றவற்றை விளக்கினர். அதுமட்டுமல்லாது ஆளுமைத் திறன் மற்றும் மென் திறன் குறித்த பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கினர்.
தொடர்ந்து பத்து நாட்கள் மூலிகை மருந்து தயாரிப்புக்கள், உற்பத்தி நடைமுறைகள், அதில் தற்கால நடைமுறைகள் குறித்து வகுப்பெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை பெருங்குடியிலுள்ள Spinco Biotech மற்றும் Peerless Biotech Pvt. Ltd. நிறுவனங்களை மாணவர்கள் பார்வையிட்டுஉயர் தர செயல்பாடு கொண்ட மருந்தியல் சாதனங் களை பார்வையிட்டதுடன் அதன் செயல் விளக்கத்தையும் கேட்டறிந்தனர். Fourrts (India) Laboratories Pvt. Ltd. மற்றும் Tablets (India) Ltd. நிறுவனங்களில் தொடர்ந்து அய்ந்து நாட்கள் மருந்தியல் பயிற்சியுடன் தொழில் பயிற்சியும் பெற்று மருந்து தயாரிப்புகள் குறித்த முழுத் திறனையும் பெற்றனர்.
மருந்தியல் துறையில் பல்கிப் பெருகி வரும் வளர்ச்சிகளை நன்கு அறிந்து கொள்ளும் வண்ணம் இத் தகைய தொழில்சார் பயிற்சிகளை வழங்கிய பெரியார் மருந்தியல் கல் லூரியின் நிர்வாகத்திற்கும், முதல் வர் முனைவர் இரா. செந்தாமரை மற்றும் பயிற்சி மற்றும் பணியமர்த்தும் பிரிவிற்கும் தங்களது நன்றியினைத் தெரிவித்ததோடு இளம் மருந்தாளுநர்களுக்கு இத்தகைய திறன்சார் பயிற்சிகளை வழங்கி வரும் தமிழ்நாடு மருந்தியல் நல அறக்கட்டளைக்கும் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.